About Me

header ads

ஹரீஸ் எம்.பி அரசியலைத்தாண்டி பார்க்கப்படுகின்றாரா ?
ஏ.எல்.றமீஸ்

சிறுபான்மை சமூகங்கள் வாழும் ஒரு நாட்டில் அபிவிருத்தியை மட்டும் இலக்காக கொண்டு செயற்படுவதைவிட அம் மக்களின் இருப்பு தொடர்பாக சிந்தித்து செயற்படுவதே பிரதானமாகும்.

இப்படியான குறிக்கோல்களை அடைவதற்காகத்தான் படித்தவர்கள் அதிலும் சட்டத்தரணிகள் அரசியலுக்குள் வர வேண்டுமென்று விடாப்புடியாக சமூகவியலாளர்கள் இருந்து வருகின்றனர்.

அம்பாரை மாவட்டத்தை பொறுத்தவரைக்கும் பெரும் தலைவர் அஷ்ரப்,தொப்பி முகைதீன்,அன்வர் இஸ்மாயில், எச்.எம்.எம்.ஹரீஸ் ஆகிய சட்டத்தரணிகள் மக்களால் தெரிவு செய்யப்பட்டு பாராளுமன்றம் சென்றவர்கள்.

இப்பட்டியாலில் தற்போது மூவர் இல்லாத நிலையில்   அம்பாரை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களில் ஹரீஸ் மாத்திரமே இன்று  சட்டத்தரணியாக இருந்து கொண்டு பாராளுமன்றம் செல்கின்றார். 

இவ்வேளையில் சிறுபான்மை மக்களின் தளபதி எனும் விருதை சட்டத்தரணி ஹரீஸ் அவர்களுக்கு வழங்கவுள்ளதாக பிரதான செய்தி நிறுவனம் ஒன்று அறிவித்துள்ளது.

கிழக்கு மாகாணத்தில் எத்தனையோ அரசியல் வாதிகள் இருக்கத்தக்க ஏன் இவ்விருதை ஹரீஸ் அவர்களுக்கு வழங்குகின்றோம் என்ற காரணத்தையும் அந் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

கடந்த மஹிந்த அரசாங்கத்திலும் சரி இன்றைய அரசாங்கத்திலும் சரி சிறுபான்மை முஸ்லிம்கள்  பெரும்பான்மை சமூகத்தினரால் நன்கு திட்டமிடப்பட்டு அரங்கேற்றப்படும் இன அழிப்பு நடவடிக்கைகளின் போது பாதிக்கப்பட்ட மக்களின் அரணாக தன்னை அடையாளப்படுத்தியது ஹரீஸ் எம்.பி மாத்திரமே.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அன்றைய கால கெடிபிடிகளுக்கு முகம்கொடுத்த அழுத்கம மக்கள்  நிலைகுலைந்து உயிரை கையில் பிடித்துக் கொண்டு மறைந்திருந்த வேளை தன்னுயிரை துச்சமென நினைத்து முதல் நபராக களம் புகுந்தவர் ஹரீஸ் அவர்கள்.

அதே போன்று  அன்மையில் அம்பாரை பள்ளிவாசல்  பெரும்பான்மை காடையர்களால் தாக்கப்பட்டு கொண்டிருக்கின்றது என்ற செய்தி கிடைத்த மறுகனமே எதிரியின் எதிர்  நின்றவர் ஹரீஸ். 

இவரின் வருகையை சற்றும் எதிர்பார்க்காத பேரினவாத வன்முறையாளர்கள் ஹரீஸை சூழ்ந்து கொண்டு அவரை தாக்குவதற்கு முயற்சித்த போதும் புறமுதுகு காட்டி ஒடிவிடாமல் நெஞ்சை நிமிர்த்தி எதிரிகளை எதிர் கொண்டு பள்ளிவாசலையும்,அங்குள்ள மக்களையும் பாதுகாப்பான நிலைக்கு கொண்டு வந்ததை பிரமிப்பான சாதனையாக பார்க்கப்படுகின்றது. 

தாக்கப்பட்ட அம்பாரை பள்ளிவாசலுக்கு செல்வதற்கு நாட்டின் பிரதமர் கூட அச்சப்பட்டு ஒலுவில் துறைமுக விடுதியில் ஆலோசனைக் கூட்டம் நடாத்தும் அளவிற்கு வன்முறை தாண்டவம் ஆடிய காலகட்டம் அது

 இருந்த போதும் பிரதியமைச்சர் ஹரிஸால் செல்ல முடியுமென்றால் ஏன் நாட்டின் பிரதமர் அங்கு போக முடியாது என்ற குற்றச்சாட்டையும் பிரதமர் ஏற்க வேண்டியிருந்தது.

நீண்ட காலமாக பேசப்பட்டு வரும் முஸ்லிம்களின் காணிப்பிரச்சினைக்கு உரிய தீர்வை பெற வேண்டுமாயின் கரையோர கச்சேரி நிறுவப்பட வேண்டுமென்பதே ஹரீஸின் பிரதான கோரிக்கையாகும்.

 இதற்காக தான் சார்ந்த கட்சிக் கூட்டங்களிலும் பாராளுமன்றத்திலும் தொடர்ச்சியாக குரல் கொடுத்து வருவதுடன் கிராம மட்டங்களில் மக்களை அணிதிரட்டி தெளிவுபடுத்தி வருகின்றார்.

30 வருடங்களுக்கு மேலாக சந்தேக கண்கொண்டு கசப்பான உணர்வுகளோடு ஒரே பிரதேசத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழ் முஸ்லிம் உறவை அழகான புரிதலோடு அமைதியான முறையில் சமாதானத்தை கட்டியொழுப்புவதற்கான முயற்சியை மேற்கொண்டு வருகின்றார் ஹரீஸ் அவர்கள்.

 இம் முயற்சிக்கு இரண்டு சமூகத்தைச் சேர்ந்த சமாதானத்தை விரும்புகின்றவர்கள் பாராட்டி வருவதுடன் ஹரிஸோடு இணைந்து பணியாற்றுவதற்கும் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

சட்டத்தரணி ஹரீஸ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

Post a Comment

0 Comments