About Me

header ads

அரசியல் பழிவாங்கல் அறிக்கை கையளிப்பு



இலங்கை கல்வி நிர்வாக சேவை, ஆசிரியர் கல்வி, அதிபர் மற்றும் ஆசிரியர் சேவைகளில் அரசியல் பழிவாங்கல்களின் அடிப்படையில் வழங்கப்பட்ட நியமனங்கள் மற்றும் பதவியுயர்வுகள் தொடர்பில் ஆராய்ந்து பரிந்துரைகளை வழங்குவதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை நேற்று (21) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்பட்டது. 

குழுவின் தலைவர் கல்வியமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ஜயரத்னவினால் அவ்வறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது. 

1994 முதல் 2014 வரையிலான காலகட்டத்தில் அரசியல் பழிவாங்கல்கள் அடிப்படையில் கல்வித் துறையில் நியமனங்கள் மற்றும் பதவியுயர்வுகள் வழங்கியமை தொடர்பில் கல்விசார் தொழிற்சங்கங்கள் பாரிய எதிர்ப்பை வெளிப்படுத்தி வந்ததுடன், அதற்கான நடவடிக்கையாக நியமனங்கள் மற்றும் பதவியுயர்வுகள் தொடர்பில் கண்டறிந்து பரிந்துரைகளை வழங்குமாறு ஜனாதிபதியினால் இந்த குழு கடந்த செப்டம்பர் மாதம் அமைக்கப்பட்டது. 

இலங்கை நிர்வாக சேவையில் ஓய்வு பெற்ற அதிகாரிகள் மற்றும் இலங்கை கல்வி நிர்வாக சேவையில் ஓய்வுபெற்ற சிரேஷ்ட அதிகாரிகள் ஏழு பேரைக்கொண்டு இக்குழு அமைக்கப்பட்டுள்ளது. 

அறிக்கையை கையளிக்கும் நிகழ்வில் குழுவின் ஏனைய உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்

Post a Comment

0 Comments