மக்களுக்கு நிவாரணங்களை வழங்கியது ஐ.தே.க வால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை
மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அமைச்சரவைக்கு அனைத்து சலுகைகளுடனும் விடுமுறை வழங்கி அவர்களுடைய பிரச்சினைகளை தீர்த்துக் கொள்ள முடியும் என ஐக்கிய தேசிய கட்சி நினைத்தால், அதில் எவ்வித பலனும் இல்லை என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நேற்று (04) மாலை நீர்கொழும்பு பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
கடந்த தினங்களில் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட மாபெரும் வேலைத்திட்டங்களை நிறுத்துவதற்காகவே இன்று ஐக்கிய தேசிய கட்சியினர் நீதிமன்றத்திற்கு சென்றுள்ளனர்.
இவ்வாறான வேலைத்திட்டங்களை பார்க்கும் போது ஐக்கிய தேசிய கட்சியினருக்கு பொறுத்துக் கொள்ள முடியாதததினால் நீதிமன்றத்திற்கு சென்று பிரதமர் மற்றும் அமைச்சரவையின் செயற்பாடுகளை தற்காலிகமாக இடை நிறுத்தியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதனால் தற்போது நாட்டு மக்களுக்கு கிடைக்க வேண்டிய நிவாரணங்கள் கிடைக்காமல் போயுள்ளதாகவும் பாராளுமன்ற தேர்தலின் மூலம் இந்த பிரச்சினைக்கு உடனடியாக தீர்க்க வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
No comments