Header Ads

Breaking News

விடுமுறைக்காக தூரப்பிரயாணம் செல்வோர் அவதானம்


சீரற்ற காலநிலை காரணமாக தூர இடங்களுக்கு பயணம் செல்வோர் மிக அவதானத்துடன் தமது பிரயாணங்களை அமைத்துக்கொளவது சிறப்பானது என இப்போது கூறப்படுகின்றது. 

மாணவர்களுக்கு, பெற்றோருக்கும் விடுமுறை காலமாகையால் அனைவரும் பல்வேறு திட்டமிட்ட பிரயாணங்களை செய்து வருகின்றனர். இருப்பினும் மாலை வேளையில் கொழும்பு உட்பட மேல் மாகாணத்தில் பல பகுதிகளிலும் பாரவலாக இடியுடன் கூடிய மழை பெய்து வருகின்றது. இது மத்திய மலை நாட்டிலும் தொடர்கின்றது.

நமது நாட்டின் வாடா பகுதி முழுதுமாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இஇப்போதும் வடக்கு கிழக்கு, ஊவா, சப்ரகமுவ பகுதிகளில் ஆங்காங்கே மழை பெய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

அதேவேளை, குளங்கள், ஆறுகள், குட்டைகள் என்பன நிரம்பி வழிகின்றமையை கருத்திற்கொண்டு நடக்குமாறு நாம் வேண்டிக்கொள்கின்றோம். 

No comments