Header Ads

Breaking News

விரைவில் மாகாண சபை தேர்தல் !!!


- அலுவலக செய்தியாளர்-
உச்ச நீதிமன்றின் தீர்ப்பை அடுத்து பதவி ஏற்கவுள்ள ஐக்கிய தேசிய முன்னணி அரசு உடனடியான தேர்தலொன்றுக்கு முகம் கொடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மாகாண சபைகளுக்கான தேர்தல்களை நடத்துவதற்கான பலமான ஆயத்தங்களை முன்னெடுக்கத் தயார் நிலையிலுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேவேளை வடக்கு, கிழக்கு மாகாணங்கள் தவிர்ந்த ஏனைய மாகாணங்களை அரசியல் ரீதியிலான சீரமைப்புகளை செய்த பின்னரே தேர்தல் ஒன்றிற்காக செல்ல முடியுமான நிலையில் ஐ.தே.மு உள்ளதாகவே உள்வீட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

எது எவ்வாறிருப்பினும் உடனடியாக மாகாண சபைகளுக்கான ஆயத்த நிலைகள் தோன்றும் என்பதில் எவ்வாறான சந்தேகம் இருக்க முடியாது 

No comments