தேவையான நிதி முழுதும் விடுவிக்கப்படும்; அமைச்சர் ரஞ்சித் மத்தும

.

வெள்ள அனர்த்தம்  காரணமாக பாதிக்கப்பட்டுள்ள கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்கள் கோரிய நிதி விடுவிக்கப்பட்டு மக்களுக்கு நட்டஈடுகள் வழங்கப்படும் என  பொது நிர்வாகம் மற்றும்  இடர் முகாமைத்துவ அமைச்சர் ரஞசித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

இன்று கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்ற கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களின் வெள்ள அனர்த்தம் தொடர்பாக அமைச்சர் தலைமையில் ஆராயும் விசேட  கூட்டத்தின் பின்னர் ஊடகவியலாளர்களுக்கு கருத்த தெரிவித்த போதே  அவர் இதனை தெரிவித்துள்ளார்.
வெள்ளம் அனர்த்தம் தொடர்பாக ஏற்பட்டுள்ள பாதிப்புக்கள் தொடர்பாக ஆராய்ந்துள்ளோம், பாதிக்கப்பட்டுள்ள மக்களின் தேவைகள்  மற்றும் அவசர உதவிகள் குறித்த கலந்துரையாடப்பட்டது. இதன் போது  மக்களுக்கும் அவர்களின் வாழ்வாதாரத்திற்கும் ஏற்பட்டுள்ள அழிவுகள் தொடர்பில் அறிக்கைகள் கிடைக்கப்பெற்றதும் அதற்கான நட்டஈடுகள் வழங்கப்படும். அதற்காக கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டச் செயலகங்கள் கோருகின்ற நிதி விடுவிக்கப்படும் என்றும்  அவர் தெரிவித்தார்.
 இந்த உதவிகள்  அனைத்தும் விரைவாக வழங்குவதற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும்  அவர் தெரிவித்தார்

Post a Comment

0 Comments