Header Ads

Breaking News

சட்டம் நாம் எதிர்பார்ப்பதை தரும் ; தினேஷ்



பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவர் தலைமையிலான அமைச்சரவையின் பணிகளுக்கு மாத்திரமே மேன்முறையீட்டு  நீதிமன்றம்  இடைக்கால  தடையினை விதித்துள்ளது. எவரின்  பதவிகளையும் நீக்கவில்லை, மேலும் கருத்து தெரிவித்த  பாராளுமன்ற  உறுப்பினர்  தினேஷ் குணவர்தன , மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பினை  எதிர்த்து உயர்நீதிமன்றில் மேன்முறையீடு தாக்கல் செய்துள்ளோம். மக்கள்  எதிர்பார்த்த மாற்றத்தினை விரைவில் சட்டத்தின் ஊடாக பெற்றுக் கொள்வோம்  என தெரிவித்தார்.
பொதுஜன பெரமுனவின்  கட்சி தலைமையகத்தில் இன்று செவ்வாய்கிழமை  இடம் பெற்ற ஊடகிவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு  கருத்துரைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
தமிழ் தேசிய கூட்டமைப்பினர், மக்கள் விடுதலை முன்னணியினர்  ஆகிய  கட்சிகளின் ஆதரவுடனே  இன்று  ஐக்கிய தேசிய   கட்சி செயற்படுகின்றது. ஆகவே  இன்றும்  பாராளுமன்றத்தினை புறக்கணிப்போம்.   இன்றைய அரசியல்  நெருக்கடியின் காரணமாக முத்துறைகளும் முரண்படும் நிலையே தோற்றம் பெற்றுள்ளது. பொதுதேர்தல் ஒன்றின் ஊடாகவே  அனைத்து  பிரச்சினைகளுக்கும் தீர்வு காண முடியும் என்றார்.

No comments