சாய்ந்தமருது மக்களின் உண்மையான போராட்டம் தொடர்கிறதா ???-அபூ ஜாஸி- 

சாய்ந்தமருது மக்கள் தமது போராட்டத்தை வென்றெடுப்பதற்கான நேரம் கனிந்துள்ளதாகவே தோன்றுகின்றது. முஸ்லீம் காங்கிரசின் பிரதித்தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான எச்.எம்.எம். ஹாரிஸ் அவர்கள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சிக்கான ராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளமை அவர்களுக்கு கிடைத்த வாரமாகவே தோன்றுகின்றது.  

மருதூர் மக்களின் தேவைகள் வென்று கொள்ளப்படவேண்டும் என்ற நோக்கோடு அரசியல் ரீதியிலும் சுயாதீனமான அணியாக அவர்கள் பலமான நிலைப்பாட்டினை கடந்த உள்ளூராட்சித் தேர்தலில் வெளிக்காட்டி இருந்தார்கள். அத்தோடு முஸ்லீம் காங்கிரசின் தலைமைக்கும், பிரதித்தலைவருக்கும் எதிராகவும் அவர்களின் போராட்டம் திசை திருப்பப்பட்டிருந்தது. 

எவ்வாறிருப்பினும் மா நகர சபை ஒன்று கூடலில் சாய்ந்தமருது சுயேற்ச்சைக் குழுவின் நிலைப்பாடானது முஸ்லீம் காங்கிரசுக்கு எதிரான நிலைப்பாடாகவே இருந்து வந்தது. இந்நிலையிலும் ஒரு நியாயம் இருக்கத்தான் செய்தது. இருப்பினும் தமது இலக்குக்காக அவர்கள் எதை பலிகொடுத்தாலும் அடைந்தே தீர வேண்டும் என்ற நிலைப்பாட்டை எடுத்தது சமூக ரீதியில் ஏற்புடையதாகவில்லை. 

அவ்வாறான மற்றுமொரு சந்தர்ப்பத்தில், அதாவுல்லா சுதந்திரக்கட்சியோடு நின்ற பலமான சந்தர்ப்பத்தை பயன்படுத்தி "மொட்டு " வோடு கைகோர்த்தாவது  தமது இலக்கை அடைந்து கொள்ள முயற்சிக்கலாம் என்கின்ற எதிர்பார்ப்பு பலமான இன்னொமொரு தடவை  சமூகத்தினால் உற்று  நோக்கப்பட்டது.

இவ்வாறான நிலையில் தடம்புரண்டு வரும் சமூக தேவை ஒன்றுக்காக, முழு சமூகத்தினதும் ஒரு தேவையினை பலி கொடுத்தாவது தமது இலக்கை அடைய நினைப்பவர்கள் இந்நிலையில் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சிக்கான ராஜாங்க அமைச்சரோடு நடந்து கொள்ளப்போகும் விதமே  அவர்களது உண்மைத்தன்மையை வெளிக்காட்டும். 

Post a Comment

0 Comments