Header Ads

Breaking News

இன்று ஜனாதிபதி - பொது பெரமுன சந்திப்பு




ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் உறுப்பினர்களுக்கும் இடையில் இன்று (10) கலந்துரையாடல் ஒன்று நடைபெறவுள்ளது. 

இன்று மாலை இந்தச் சந்திப்பு இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஜனாதிபதியைச் சந்தித்து தற்போதைய அரசியல் சிக்கல்கள் குறித்து கலந்துரையாட ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளனர். 

எவ்வாறாயினும் இந்த கலந்துரையாடல் தொடர்பில் இதுவரையில் சரியான தகவல்கள் எதுவும் தெரியவில்லை.

No comments