மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம் ; சமாதானத்தை குழப்ப வேண்டாம்


 சமாதானத்தை குழப்புகின்ற  சக்திகளே படுகொலைக் கலாசாரத்தில் ஈடுபடுகின்றனர் என மட்டக்களப்பில் வவுணதீவுப் பொலிஸாரின் படுnடிகாலைகளைக் கண்டித்து இன்று பிற்பகல் இடம்பெற்ற  துண்டுப் பிரசுர விநியோகத்தின்போது தெரிவிக்கப்பட்டது.
மட்டக்களப்பு சிவில் பிரஜைகள் சபையின் Batticaloa District Civil Citizen Council இன் தலைவர் ரீ. திருநாவுக்கரசு  தலைமையில் மட்டக்களப்பு காந்தி பூங்காவில் துண்டுப் பிரசுர விநியோகம் இடம்பெற்றது.
அத்துண்டுப் பிரசுரத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 
-சாந்தியும் சமாதானமும் எமது தேவை-
நாட்டில் யுத்த அவல நிலையும் சோதனைச் சாவடிகளின் அசௌகரியங்களும் இல்லாமல் செய்யப்பட்டு  யுத்தத்தினால் ஏற்படுத்தப்பட்ட  கொலைகள் காயங்கள், அங்கவீனங்கள் இல்லாமல் மக்கள் நிம்மதிப் பெரு மூச்சு விட்டு கொண்டிருக்கின்றார்கள்.
இச்சாமாதான சூழ்நிலையை குழப்புகின்ற தரப்பினர் மக்களின் நிம்மதியை குழப்பி அதன் மூலம் இலாபம் அடைய நினைக்கின்றனர். 
படுகொலைகளைச் செய்து மக்களுக்குப் பயத்தை ஏற்படுத்தி மீண்டும் சோதனைக்கு உள்ளாக்கும் நடவடிக்கைகளை எமது சிவில்  சமூகம் வன்மையாக கண்டிக்கின்றது.
நாட்டில் என்றும் சமாதானம் நிலவி சிறுபான்மையினர் அவர்களது உரிமைகளை பெற்று ஜனநாயக வழி முறைகளை கடைப்பிடித்து வாழ வேண்டும் என்பதே எமது அமைப்பின் நோக்கங்களில் ஒன்றாகும்.
வவுணதீவில் படுகொலை செய்யப்பட்ட இரண்டு பொலிஸாரில் ஒருவர் சிங்களவர் மற்றையவர் தமிழர். 
இவர்கள் அரசாங்கத்தினால் நீதியை நிலைநாட்டுவதற்காக நியமிக்கப்பட்டவர்கள். இவர்கள் மக்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதற்காகவே வவுணதீவிற்கு வந்தவர்கள். சமாதானத்தை குழப்புகின்ற  சக்திகள் அவர்களைப் படுகொலை செய்யதனர். அவர்கள் தமது உயிரை இத்தேசத்திற்காக அர்ப்பணித்துள்ளனர்.
எனவே இவ்வாறான செயற்பாடுகள் செய்பவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும். அரச உத்தியோகத்தர் மற்றும் அரச இயந்திரம் முடக்கப்பட்டு இன முறுகலை ஏற்படுத்துவதற்காக சிலர் முனைகின்றனர்.
பல்லினமாக வாழ்வதே எமது பலம் எனக் கருதி நாம் என்றும் சமாதானமாக சாந்தியுடன் வாழ வேண்டும்
நாட்டில் எப்பிரச்சினைகள் வந்தாலும் சமாதானமாக கலந்துரையாடி ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுப்புடன் வாழப் பழகிக் கொள்ள வேண்டும் .
சமாதானத்தாலும் அஹிம்சை வழியால் தான் எமது மூதாதையர்கள் பல விடயங்களை எமது சமூகத்துக்கு வென்று தந்துள்ளார்கள் என்ற உண்மை உலகமும் அறியும் நாமும் அறிவோம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிகழ்வின்போது மட்டக்களப்பு சிவில் பிரஜைகள் சபையின்  பொதுச் செயலாளர் எச்.எம். அன்வர்  மாவட்ட அமைப்பாளர் ஏ.எஸ்.எம். ஸாதிக், ஆலோசகர் வி. கமலதாஸ் உட்பட மனித உரிமை ஆர்வலர்களும் கலந்து கொண்டனர்

Post a Comment

0 Comments