நாடு முழுதும் பனி மூட்டம் ; விஷேட வானிலை அறிக்கை

நாடு முழுவதும் பிரதானமாக சீரான வானிலை மற்றும் ஓரளவு குளிரான வானிலையும் எதிர்பார்க்கப்படுவதுடன் டிசம்பர் 20 ஆம் திகதியில் இருந்து வானிலையில் சிறிய மாற்றம் எதிர்பார்க்கப்படுகின்றது. 


நுவரெலியா மாவட்டத்தில் சில இடங்களில் அதிகாலை வேளையில் துகள் உறைபனி உருவாகக் கூடிய சாத்தியம் சிறிதளவில் காணப்படுகின்றது. 

நாட்டின் சில பிரதேசங்களில் காலை வேளையில் பனி மூட்டமான நிலை எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 

காங்கேசன்துறையில் இருந்து புத்தளம் ஊடாக காலி வரையான கடற்பரப்புகளில் காற்றானது வடக்கு முதல் வடமேற்கு வரையான திசைகளில் இருந்து வீசக்கூடுவதுடன் நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் வடக்கு முதல் வடகிழக்கு வரையான திசைகளில் இருந்து வீசக்கூடும். 

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 20-30 கிலோ மீற்றர் வரை காணப்படும். 

(வளிமண்டலவியல் திணைக்களம்)

Post a Comment

0 Comments