தலைவர், அமைச்சர் ரவூப் ஹக்கீமுக்கு, ஏ.எல்.எம். நஸீர்,எம்.பி யின் வாழ்த்து


இலங்கையில் இடம்பெற்ற அரசியல் அலங்கோலங்களை சீராக்கிய அரசியல் சாணக்கியமிக்க தலைமை இன்று இந்நாட்டின் உயர்கல்வி, நகர அபிவிருத்தி மற்றும் நீர்வழங்கல், வடிகாலமைப்பு அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்வதில் நாமும்  மிக மகிச்சியுடன் இணைந்து கொள்கின்றோம் என பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம்.நசீர் தெரிவித்தார். 

மேலும் அவர் கூறுகையில்,

இந்த நாட்டில் இன்று ஜனநாயகத்திற்கும், பாராளுமன்றின் மேலாண்மைக்கும் கிடைத்துள்ள வெற்றிக்கான பிரதான தூண் நமது கட்சியும் அதன் தலைமையுமாகும். அவ்வாறான ஒரு தலைமைத்துவத்தினை இந்நாட்டின் பாரிய அமைச்சுப் பொறுப்பொன்றினை வழங்கியுள்ளதன் மூலம் அரசு கௌரவித்துள்ளது. 

முஸ்லீம் சமூகத்தின் எதிர்பார்ப்புகளையும் தேவைகளையும் நிவர்த்திப்பதில் இவ்வரசு கூடிய கவனம் செலுத்த வேண்டும் என்பதே நமது எதிர்பார்ப்பு. இவ்வாறான சூழலில் நமது நமது மக்களும் நாமும் நமது தலைமைக்கு வாழ்த்துக் கூறுவதில் மகிழ்ச்சியடைகின்றோம்.

Post a Comment

0 Comments