முன்னாள் அமைச்சர் உதுமாலெப்பை முஸ்லீம் காங்கிரசில் இணைவாரா ??? - East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Saturday, December 29, 2018

முன்னாள் அமைச்சர் உதுமாலெப்பை முஸ்லீம் காங்கிரசில் இணைவாரா ???


- அபூ ஜாஸி -

அண்மையில் தேசிய காங்கிரசின் முக்கியஸ்தரான எம்.எஸ்.உதுமா லெப்பை தனது கட்சியை விட்டும் விலகியுள்ள நிலையில் அவர் முஸ்லீம் காங்கிரசின் பக்கமாக சேர முடியும் என்ற எதிர்பார்க்கைகளை சமீப காலமாக பரவலடைந்து வருகின்றது.
இதற்க்கு  உதமாலெப்பை அவர்களை முஸ்லிம் காங்கிரஸில் இணைத்துக் கொள்வதற்கான பேச்சுவார்த்தைகளை அக் கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள் சிலரும் அம்பாரை மாவட்டத்தைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் மேற்கொண்டு வருவதாக தகவல்கள் கசிந்துள்ளமையே காரணமாகும்.
இந்நிலையில் உதுமாலெப்பை தமது கட்சியில் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரசில் இணைய வேண்டுமாயின் அட்டாளைச்சேனையிலுள்ள தமது ஆதரவுடன் இணைய வேண்டுமென்ற எண்ணத்தை  அட்டாளைச்சேனை பிரதேசத்திலுள்ள போராளிகள்  தெரிவித்துள்ளனர். 
கடந்த உள்ளூராட்சித் தேர்தல் வரையிலுமாக எதிரணியில் பலமான சவாலாக விளங்கிய எம்.எஸ்.உதுமாலெப்பை முஸ்லீம் காங்கிரசில் சேர்வதாயின் தாம் ஆசுவாசிக்கப்படவேண்டும் என்பதுவும், தமது கடந்த காலங்களிலான போராட்டங்கள் மலினப்படக்கூடாது என்பதுமான ஆதங்கங்களே அவை.
ஜேவிபி ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்துள்ளபோது, ஆயுதமேந்தி சுட்டுக்கொன்ற தமிழ் இயக்கங்கள் சமூக நலன்கருதி கூட்டமைப்பாக செயற்படும் போது தனிப்பட்ட கருத்துமுரண்பாடு காரணமாக அல்லது தேவையொன்றுக்காக முஸ்லீம் காங்கிரசை விமர்சித்து பிரிந்து சென்ற பிரிவுகள் மீண்டும் மு.கா வுடன் இணைந்து கொள்வதென்பது சாதாரணம். ஆனாலும் வர்களின் தனிப்பட்ட அல்லது பிரதேசம் சார்ந்த நலன்கள் இவற்றை தடை  ஆக்கிவிடும் என்பது சமூகவியலாளர்களின் இப்போதைய கவலையாகவுள்ளது.
இந்நிலையில், உதுமாலெப்பை இணைவதால் முஸ்லீம் காங்கிரசின் அம்பாறை மாவட்டத்தில் பரந்த அளவிலான  மாற்றங்கள் எதுவும் நிகழப்போவதில்லை. இருப்பினும் குறித்த பிரதேசமான அட்டாளைச்சேனையில் மாத்திரம் மேலும் பலமான பிரதேச அரசியல் நிலை தோன்றும் என்பதில் மாற்றுக்  கருத்து இருக்க முடியாது. 
இவ்வாறான சந்தர்ப்பம் ஒன்றினை முன் நோக்கியே பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம்.நசீர் அவர்கள் உதுமாலெப்பை அவர்களை மு.கா வில் இணைந்து கொள்ளுமாறு பகிரங்க அறிவித்தல் விடுத்திருந்தார். அதே போன்று அண்மையில் ஒரு விசேட நிகழ்வில் பா.உ நசீர் அவர்கள் உதுமாலெப்பை அவர்களை மு.கா இணைந்து கொள்ளுமாறு நேரடியாக அழைத்தமையை உதுமாலெப்பை அவர்களின் உறவினர் ஒருவர் உறுதிப்படுத்தினார். 
அதேவேளை உதுமாலெப்பையை மு.கா கட்சியில் இணைப்பதில் சில முக்கியஸ்தர்கள் தமது சுயநல நோக்குடன் நடந்து கொள்வது அட்டாளைச்சேனை முஸ்லீம் காங்கிரசின் போராளிகளால் பெரிதும் கண்டனத்துக்குள்ளாகி வருகின்றது. இந்நிலை தொடருமென்றால் அவர்கள் எதிர்வரும் தேர்தலொன்றில் அதற்கான விளைவினை எதிர்கொள்ள வேண்டி வரும் என்பதில் சந்தேகமில்லை. 

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages