ஒலுவில் பாதிக்கப்பட்ட நன்னீர் மீனவர்களுக்கு ஏ.எல்.எம் நசீர்,எம்.பி யின் வாழ்வாதார உதவி

ஒலுவில் அல் -மினா நன்னீர் மீனவர் சங்க உறுப்பினர்களுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கி வைப்பு. 
===================================

அந் நூர் ஜும்ஆ பள்ளித்தலைவர் ஏ.எல்.அப்துல் லத்தீப் தலைமையில் நேற்று(16 ) நடைபெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல் முஹம்மட் நசீர் அவர்கள் கலந்து கொண்டு சுமார் 60 மேற்பட்ட gas cylinder களை நன்னீர் மீனவ உறுப்பினர்களுக்கும்,பயனாளிகளுக்கும் கையளிக்கப்பட்டது.

பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம்.நசீர், அவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து தமது அன்றாட ஜீவனோபாயத்தை இழந்த மீனவர்களுக்கு உதவும் நோக்கத்துடன் இந்நிகழ்வு இடம்பெற்றது. 

இந் நிகழ்வில் அட்டாளைச்சேனை பிரதேச சபை தவிசாளர் அமானுள்ளா, ஒலுவில் முஸ்லிம் காங்கிரஸின் அமைப்பாளர் சுபையிர், அந் நூர் ஜும்ஆ பள்ளித்தலைவர் அப்துல் லத்தீப், பாராளுமன்ற உறுப்பினரின் பிரத்தியோக செயலாளர் அன்வர் நௌசாட், நன்னீர் மீனவ சங்க உறுப்பினர்கள், பயனாளிகள், தாய்மார்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments