ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளருக்கு எதிராக சட்ட நடவடிக்கை ; பி.ச.உ ஹாமித் மௌலவி - East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East

East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East

East Times:Bringing news stories from Sri Lanka

STAY WITH US

test banner

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Friday, December 28, 2018

ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளருக்கு எதிராக சட்ட நடவடிக்கை ; பி.ச.உ ஹாமித் மௌலவி


ஓட்டமாவடி பிரதேச சபையின் 9 வது அமர்வு தவிசளார் ஐ.ரீ.அஸ்மி தலைமையில் கடந்த 26.12.2018ம் திகதி புதன்கிழமை இடம்பெற்றது.
அமர்வில் கலந்து கொண்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சபையில் இடம்பெற்ற மோசடிக்கு எதிர்ப்புத்தெரிவித்து கறுப்புப்பட்டி அணிந்து கலந்து கொண்டதுடன், சபை அமர்வுகளில் கலந்து கொள்ளாத உறுப்பினர் ஒருவரின் கையெழுத்தை போலியாக இட்டு சம்பளம் பெறப்பட்டுள்ளமை தொடர்பில் கேள்வி எழுப்பப்பட்டதுடன், சபையில் அமளிதுமளி ஏற்பட்டு கடும் வாக்குவாதமாக மாறியது.
இதன் போது ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட பிரதேச சபை உறுப்பினர் எம்.ஐ.ஹாமித் மெளலவி "போலியான கையெழுத்திட்டு தவிசாளர் மோசடியில் ஈடுபட்டுள்ளதாக குற்றஞ்சாட்டியதுடன், அதற்கான வலுவான ஆதரங்கள் தம்மிடம் இருப்பதகாவும்" தெரிவித்தார்.
மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,
"சபையின் சட்ட விதி முறைகளின் பிரகாரம் சபையின் உறுப்பினர் ஒருவர் தொடர்ச்சியாக மூன்று கூட்டங்களுக்கு சமூகமளிக்காத பட்சத்தில் அவரின் உறுப்புரிமை இல்லாமல் போவதுடன், குறித்த உறுப்பினர் சபை அமர்வுகளில் கலந்து கொள்ளாத நிலையில் அவரின் கையெழுத்திட்டு சம்பளம் பெறப்பட்டமை சட்டவிரோதமானது. இதனை வன்மையாகக் கண்டிப்பதுடன் இதற்கெதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்" எனவும் வலியுறுத்தியுள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages