கோவில் பிரசாதம் யமனானது


கர்நாடகா மாநிலத்தில் அமைந்துள்ள  கோவில்  ஒன்றில் பிரசாதம் உட்கொண்ட பெண்கள் உட்பட 11 பேர் உயிரிழந்துள்ளனர். 
இது குறித்து மேலும்  தெரியவருவதாவது,
கர்நாடக மாநிலம் சாமராஜநகர் ஹனுர் தாலுகாவில் சுல்வாடி கிராமத்தில் அமைந்துள்ளது  கோவிலில்  இன்று வெள்ளிக்கிழமை என்பதால் கோவிலில் சிறப்பு பூஜைக்கு ஏற்பாடு செய்திருந்தனர். பூஜைகள் முடிந்து பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
சிறிதுநேரத்தில் பிரசாதம் உட்கொண்ட  பக்தர்களுக்கு திடீரென உடல்நல குறைவு ஏற்பட்டது. அதில் 2 பெண்கள் உட்பட 11 பேர் உயிரிழந்தனர்.
 இதனையடுத்து, சுமார் 40க்கு மேற்பட்ட பக்தர்கள் அருகிலுள்ள வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு உள்ளனர்.
மேலும், பிரசாதம் உட்கொண்ட 60க்கு மேற்பட்ட காகங்களும் இறந்து கிடந்தன என முதல் கட்ட தகவல் வெளியானது

Post a Comment

0 Comments