About Me

header ads

முஸ்லிம்களின் நலனில் உண்மையான அக்கறையுள்ளவர்கள் முஸ்லீம் காங்கிரசோடு இணைய வேண்டும் ; ஏ.எல்.தவம், மு.மா.ச.உ


முஸ்லீம் தேசியம் என்கின்ற தீர்வுக்கான எண்ணக்கருவோடு பயணிக்கின்ற ஒரே கட்சி முஸ்லீம் காங்கிரஸ் என்பதில் எவ்வித மாற்றுக கருத்தும் இருக்க முடியாது என முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஏ.எல் .தவம் சற்று முன் நமது ஈஸ்ட் டைம்ஸ் இணையத்தளத்துடனான கலந்துரையாடல் நமது அலுவலகத்தில் இடம்பெற்ற போதே இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில், இன்றுள்ள நெருக்கடி நிலை குறித்து முஸ்லீம் காங்கிரஸ் தலைமை மிக உறுதியானதும், நேர்மையானதுமான நிலைப்பாட்டினை தொடர்ச்சியாக வெளிக்காட்டியுள்ளது. சட்ட ரீதியிலானதும், பொருத்தமானதுமான முடிவுகளையும் வழிகாட்டல்களையும் செய்திருக்கின்றது அதற்காக நாம் மகிழ்ச்சியடைகின்றோம்.

தனிநபர்களுக்கான தேவைகளுக்காக சமூகத்தை அடகு வைக்கின்ற தேவை இந்தக் கட்சிக்கு ஒரு போதும் இருந்ததில்லை.  நிலத்தொடர்பற்றதுவும், உரிமைகளை உள்ளடக்கியதுமான  ஒரு தீர்வுப்பொதியினை எமது கட்சி தன்னகத்தே கொண்டுள்ளது. அதன் மூலங்களை அடைந்து கொள்வதற்கான நகர்த்தல்களை தெளிவாக நகர்த்தி வருகின்றது. 

தென்கிழக்கு என்கிற பதம் மறைந்த தலைவர் மூலமாக முஸ்லீம் மக்களின் தேவைகளை அடையாள படுத்தக்கூடிய ஒரு உரிமைக்கான ஒட்டு மொத்த அடையாளமாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. எனவே முஸ்லீம் தேசியம்  என்கின்ற உணர்வோடு உண்மையாகவே பயணிக்க விரும்புகின்றவர்கள் நிபந்தனைகளை விதிக்காது முஸ்லீம் காங்கிரசோடு இணைந்து கொள்ளவேண்டும்  எனவும் குறிப்பிட்டார். 

Post a Comment

0 Comments