Header Ads

Breaking News

மறைந்தும் மறையாத மனிதருள் மானிக்கம்தான் அதிபர் பிரின்ஸ் காசிநாதர் ; சட்டத்தரணி எஸ்.எம்.ஏ.கபூர்


-சட்டத்தரணி எஸ்.எம்.ஏ. கபூர்

மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் ஆங்கில ஆசிரியராகவும் அதிபர் திலகமாகவும் இருந்து மறைந்த பிறின்ஸ் காசிநாதர் அவர்கள் கிழக்கிலங்கையில் இருந்து தோன்றிய ஒரு ஆங்கிலேயனாக, ஆசிரியராக ஆசானாக, அதிபராக, நாடாளுமன்ற உறுப்பினராகவும் பல நலன்புரி சமூகசேவை இயக்கங்கள்ஃசங்கங்கள்ஃநிறுவனங்களின் ஆலோசகராகவும் போசகராகவும் இருந்து அளப்பரிய சேவைகள் பல புரிந்து எமது தமிழ் முஸ்லிம் ஒற்றுமையின் காவலனாகவும் இயங்கிய இவரின் பிரிவு எங்களால் ஒருபோதும் ஈடுசெய்யமுடியாத மாபெரும் இழப்பீடாகும்.

1965ஃ70 ஆண்டுகளில் மேற்படி கல்லூரியின் பழைய மாணவனாக நான் அன்னாரிடம் கல்வி கற்ற அக்காலங்களில் அவரின் ஆங்கில அறிவும் அதிலுள்ள புலமையும் கண்டும் கேட்டும் ஆச்சரியமடைந்துள்ளோம். அன்னாரின் கம்பீரமான குரலும், கவர்ச்சிகரமான தோற்றமும் எங்களால் இன்றும் இலகுவில் மறக்கமுடியாததாகும்.

நாங்கள் இப்பொழுதும் அன்னாரின் மாணவன் என்று கூறிக்கொள்வதில் பெருமைப்படுவதுண்டு. இப் பகுதிகளிலிருந்து தோன்றிய பல பாராளுமன்ற உறுப்பினர்களை உருவாக்கிய பெருமை இவருக்குண்டு. கடமை, கண்ணியம், கட்டுப்பாடு, ஒழுக்க விழிமியங்களை எல்லாம் எங்களுக்கு புகட்டி புத்திமதி கூறி பணிவான பண்புகளை எங்கள் எல்லோருக்கும் உரமாக ஊட்டி மனித நேயங்களாக மாற்றிய பெருமைக்குரிய பெருமகனாவார் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. இவரின் மறைவுக்கு எங்களின் ஆழ்ந்த அனுதாபத்தை அன்னாரின் குடும்ப அங்கத்தவர்களுக்கும், உறவினர்களுக்கும்; உணர்வுபூர்வமாக தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.

No comments