ஜனாதிபதியின் உத்தரவுக்கு எதிரான மனுவை விசாரிக்கும் அதிகாரமில்லை - சட்டமா அதிபர் - East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East

East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East

East Times:Bringing news stories from Sri Lanka

தலைப்புச் செய்திகள்

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Tuesday, December 4, 2018

ஜனாதிபதியின் உத்தரவுக்கு எதிரான மனுவை விசாரிக்கும் அதிகாரமில்லை - சட்டமா அதிபர்
பாராளுமன்றத்தை கலைப்பது சம்பந்தமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை சவாலுக்கு உட்படுத்தும் மனுக்கள் மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் தற்போது இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது. 

இதன்போது மனுக்கள் மீதான தனது தரப்பு அறிக்கையை நீதிமன்றில் தாக்கல் செய்த சட்டமா அதிபர் ஜயந்த ஜயசூரிய, இந்த மனுவை விசாரிப்பதற்கு உச்ச நீதிமன்றத்துக்கு அதிகாரமில்லை என்று நீதிமன்றில் தெரிவித்துள்ளார். 

ஜனாதிபதி அரசியலமைப்பை மீறுகின்ற சந்தர்ப்பத்தில் அது சம்பந்தமாக எடுக்க வேண்டிய நடவடிக்கை சம்பந்தமாக அரசியலமைப்பின் 38 (2) அ சரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் நீதிமன்றில் தெரிவித்துள்ளார். 

அத்துடன் ஜனாதிபதி அரசியலமைப்பை மீறி இருந்தால் அது சம்பந்தமாக பாராளுமன்றத்தால் மாத்திரமே நடவடிக்கை எடுக்க முடியும் என்று அவர் நீதிமன்றில் கூறியள்ளார். 

பாராளுமன்றத்தை கலைப்பது சம்பந்தமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை சவாலுக்கு உட்படுத்தும் மனுக்கள் மீதான விசாரணை 07 நீதியரசர்கள் முன்னிலையில் இன்று இரண்டாவது நாளாக விசாரணைக்கு எடுக்கப்பட்டுள்ளது. 

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages