About Me

header ads

மாவடிச்சேனை மக்களோடு நான் இருக்கிறேன் ; மாவடிச்சேனை பி.ச உ கே.எல்.அஸ்மி


மாவடிச்சேனைக் கிராமத்தின் அபிவிருத்தியை இலக்காகக்கொண்டு என்னால் இயன்ற பணிகளை மேற்கொண்டு வரும் வேளையில், அதனையும் தடுக்கவும் அதற்கு முட்டுக்கட்டை போடவும் எதிரணி உள்ளூர் அரசியல்வாதிகள் செயற்பட்டு வருவது கவலையளிக்கின்றது என கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச சபை நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் உறுப்பினர் கே.எல்.அஸ்மி தெரிவித்தார்.
மாவடிச்சேனை மதரஸதுல் ஹஸனாத்தின் ஒரு வருடப்பூர்த்தியும் பரிசளிப்பு விழாவும் கடந்த 28.12.2018ம் திகதி வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.
மாவடிச்சேனை ஜும்ஆப் பள்ளிவாயலின் செயலாளர் எம்.எம்.அமீர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், கெளரவ அதிதியாகக்கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,
நான் இந்த மண்ணையும் இந்த மக்களையும் நேசிப்பவன். அதற்காகவே இந்த மக்களோடு மக்களின் துயரங்களோடு ஒன்றித்து வாழ்ந்து கொண்டிருக்கிறேன். அந்த வகையில், இந்த மக்களின் பிரச்சனைகளைப்பேச வேண்டும். அவர்களுக்கான தேவைகளை முடிந்தளவு செய்து கொடுக்க வேண்டுமென என்னாலான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றேன்.
அதனையும் குழப்பி இல்லாமலாக்குகின்ற வேலைகளையே இப்பிரதேசத்திலுள்ள முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் இன்னாள் உறுப்பினர்களும் ஏனைய கட்சியினரும் செய்து வருகின்றனர்.
கடந்த உள்ளூராட்சித்தேர்தலின் போதும் கலாகாலமாக மாவடிச்சேனையிலிருந்து வருகின்ற மக்கள் பிரதிநிதியை இல்லாமலாக்குகின்ற முயற்சியை முஸ்லிம் காங்கிரஸ் அணியினர்  மேற்கொண்டிருந்தனர்.
இறைவனின் உதவியால் அந்தச்சதியிலிருந்து மாவடிச்சேனை பாதுகாக்கப்பட்டுள்ளது. இனி வருங்காலங்களில் இப்பிரதேச மக்கள் சிந்தித்துச்செயற்பட வேண்டும். இவ்வாறான சதிகளை முறியடிக்க பொருத்தமானவர்களைத்தேர்வு செய்ய வேண்டும்.
எனது சக்திக்குட்பட்டு முடிந்த சேவைகளைச் செய்து வருகின்றேன். மாவடிச்சேனை சகல வளங்களையும் பெற்றுக்கொள்ள வேண்டுமென்பதற்காக ஒரு பிரதேச சபை உறுப்பினரால் என்ன முடியுமோ, அதனையும் தாண்டி சில பணிகளை மேற்கொண்டு வருகின்றேன். இறைவன் துணையுடன் எதிர்காலத்திலும் என்னால் முடிந்த பணிகளை முன்னெடுப்பேன்.
மாவடிச்சேனை-செம்மண்ணோடை வட்டாரத்திலுள்ள முன்பள்ளிகளின் வளர்ச்சி தொடர்பில் அதிக அக்கறை செலுத்த வேண்டியுள்ளது. அதன் நிகழ்வுகளுக்கு எனக்கு விடுக்கப்படுகின்ற அழைப்புகளைக்கூட தடுக்கின்ற கைங்கரியங்களை மேற்கொண்டு இந்த முஸ்லிம் காங்கிரஸினரே மேற்கொண்டு வருகின்றனர்.
மாவடிச்சேனைக் கிராமத்தின் அபிவிருத்தியை இலக்காகக்கொண்டு என்னால் இயன்ற பணிகளை மேற்கொண்டு வரும் வேளையில், அதனைத் தடுக்கவும் அதற்கு முட்டுக்கட்டை போடவும் என்னால் முன்னெடுக்கப்படுகின்ற பணிகளில் தங்களின் பெயர்களைப் போட்டுக் கொள்ளவும் எதிரணி உள்ளூர் அரசியல்வாதிகள் செயற்பட்டு வருவது கவலையளிக்கின்றது என கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச சபை நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் உறுப்பினர் கே.எல்.அஸ்மி மேலும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் கெளரவ அதிதியாகக் கலந்து கொண்ட பிரதேச சபை உறுப்பினர் கே.எல்.அஸ்மி மாவடிச்சேனை மதரஸதுல் ஹஸனாத் ஹிப்ளுப்பிரிவு மாணவ, மாணவிகளுக்கு பெறுமதியான கற்றல் உபகரணங்கள் அடங்கிய பைகளை வழங்கி வைத்ததோடு, தான் கலந்து கொள்கின்ற அனைத்து முன்பள்ளி நிகழ்வுகளிலும் இவ்வாறான உதவிகளைத் தொடர்ந்து செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில். முஸ்லிம் கலாசார திணைக்களத்தின் கிழக்கு மாகாணப் பணிப்பாளர் அஷ்ஷெய்க் ஏ.எல்.ஜுனைத் நளீமி, சாட்டோ இணையதளத்தின் பணிப்பாளர் வை.எல்.மன்சூர், மாவடிச்சேனை அல் இக்பால் வித்தியாலய அதிபர் எம்.ஷல்மானுல் ஹரீஸ், கல்குடா ஜம்இய்யதுல் உலமா சபையின் முன்னாள் தலைவர் ஏ.எம்.தாஹிர் மாவடிச்சேனை ஜும்ஆப் பள்ளிவாயலின் மக்தப்பிரிவினுடைய தலைவர் NM. நாசர், மாவடிச்சேனை உப தபாலதிபர் எம்.எஸ்.எம்.அஷ்ரப் மௌலவி, இராஜாங்க அமைச்சர் அலி ஸாஹிர் மெளலானாவின் இணைப்பாளர் ஐ.சபீக் மற்றும் முக்கியஸ்தர்கள், மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்

Post a Comment

0 Comments