பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதியுடன் இணக்கமாக நடக்க வேண்டும் ; சந்திமஜனாதிபதிக்கு ஏற்ற விதமான பிரதமர் ஒருவர் நியமிக்கப்படவில்லை எனின் நாட்டை முன்னோக்கி எடுத்துச் செல்ல முடியாது என பாராளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார். 

ஜனாதிபதிக்கு ஏற்ற விதமான பிரதமர் ஒருவரை முன்வைப்பது பாராளுமன்ற உறுப்பினர்களின் கடமை எனவும் அவர் தெரிவித்துள்ளார். 

அம்பலாங்கொடை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

இதேவேளை தற்போதைய அரசியல் சிக்கலுக்கு அனைவரும் ஒன்றிணைந்து கலந்துரையாடி தீர்வு ஒன்றிற்கு வர வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தனாயக்க தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments