Header Ads

Breaking News

லீடர் அஷ்ரப்பின் நாமத்தை அழிக்கும் சதியை மு.கா எப்படி முகங்கொடுக்கப்போகிறது ........



லீடர் அஷ்ரப்பின்  நாமத்தை அழிக்கும் சதியை மு.கா எப்படி முகங்கொடுக்கப்போகிறது ........

-அசாம் முஹம்மது -
முஸ்லிம்களின் அடையாளமாக திகழ்ந்த பெருந்தலைவர் மர்ஹூம் அஷ்ரப் அவர்களின் நினைவாக நாடு பூராகவும் வேலைத்திட்டங்களை ஆரம்பித்து, அத்திட்டங்களுக்கு அவரின் பெயரை சூட்டி மகிழும் இக் காலகட்டத்தில், முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல். தவம் அவர்களினால் அக்கரைப்பற்று பள்ளிக்குடியிருப்பில் " லீடர் அஷ்ரப் கனிஷ்ட கல்லூரி" என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்ட பாடசாலையின் பெயரை அழிக்க சதித்திட்டம் இடம்பெற்று வருகிறது.

பள்ளிக்குடியிருப்பைச் சேர்ந்த எஸ். லாபிர் என்பவரே இச்சதியை செய்து வருவதாக தகவல்கள் கசிந்துள்ளது. ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கியஷ்தர் எனத் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டுள்ள இவர், லீடர் அஷ்ரப் கனிஷ்ட கல்லூரி என்ற பெயரை இல்லாமல் செய்து, தனது மகளான ஸபா என்பவரின் பெயரில் " அஸ் - ஸபா வித்தியாலயம்" என பெயர் மாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக அறியக்கிடைக்கிறது.

இது தொடர்பில் தவம் அவர்களை தொடர்புகொண்ட போது " லாபிர் என்பவர் அப்படியொரு முயற்சி எடுப்பதாக சில நாட்களின் முன்பாக தகவல் கிடைத்தது. கி.மா. கல்வி அமைச்சின் செயலாளருக்கு கொடுக்க வேண்டியதை கொடுத்து தான் இவ்வாறு மாற்றுவதாக குறிப்பிட்ட நபர் கூறியதாக தகவல் கிடைத்தது. அதனை அவ்வளவு  பொருட்டாக நான் எடுக்கவில்லை. அதனை கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுப்போம். ஏன்எனில் இது முஸ்லிம் சமூகத்தின் தலைவரின் பெயரோடு சம்மந்தப்பட்டது. அவ்வாறு செய்ய இடமளிக்க முடியாது" எனக்கூறினார்.

இது தொடர்பில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் றஊப் ஹக்கீம் அவர்களை தொடர்பு கொள்ள முயற்சித்த போதும் முடியவில்லை. முன்னாள் முதலமைச்சரின் தொலைபேசி இயங்கிய போதும் பதிலளிக்கப்படவில்லை.  பாராளுமன்ற உறுப்பினர் நசீருக்கு இது தொடர்பில் தவம் அவர்கள் தகவலளித்துள்ளதாக அறியக்கிடைக்கிறது. முஸ்லிம் காங்கிரஸ் இவ்விடயம் தொடர்பில் எப்படி பதில் நடவடிக்கை எடுக்கப்போகிறது என பிரதேச மக்கள் எதிர்பார்த்த வண்ணமுள்ளனர். இது மு.கா வின் மறைந்த மரியாதைக்குரிய தலைவரின் நாமம் சம்மந்தப்பட்ட உணர்வுப்பூர்வமான விடயம். 

இப்பாடசாலை 2017.09.15 ஆம் திகதி கிழக்கு மாகாண கல்வியமைச்சர், கிழக்கு மாகாண முதலமைச்சர், அமைச்சர் ரவுப் ஹக்கீம், பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம்.நசீர், பிரதி அமைச்சர் பைசால் காசிம் என பல அதிதிகள் கலந்துகொண்டு ஆரம்பித்து வைக்கப்பட்ட பாடசாலை என்பது குறிப்பிடத்தக்கது

No comments