Header Ads

Breaking News

ACMC யின் ஓட்டமாவடி பிரதேச சபையில் ஊழல் ; முஸ்லீம் காங்கிரஸ் உறுப்பினர்கள் அதிரடி



அகில இலங்கை மக்கள் காங்கிரசின் ஆளுகையின் கீழுள்ள ஓட்டமாவடி பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் செயலாளர் தொடர்பிலான பல சிக்கலான நிதிக் கையாள்கைகள் இருப்பதாக முஸ்லீம் காங்கிரஸ் பிரதேச சபை உறுப்பினர்கள் குற்றஞ் சாட்டியுள்ளனர். 

இன்று காலை இடம்பெற்ற பிரதேச சபை அமர்வில் முஸ்லீம் காங்கிரஸ் உறுப்பினர்கள் கருப்புப்பட்டி அணிந்தே சபைக்குள் பிரவேசித்துள்ளனர். இந்நிலையில் சபை அமர்வு ஆரம்பமானதும், இரு தரப்புக்கும் இடையிலான வாக்குவாதத்தின் போதே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சபைக்கு வராத ஒரு உறுப்பினரின் மாறுபட்ட ஒப்பங்களுடன் இந்நிதிக் கையாள்கைகள் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் இவ்விடயம் தொடர்பிலான  தகவல்களை சபையின் செயலாளரிடம் கோரி இருந்த நிலையிலேயே பிரஸ்தாப உறுப்பினரின் கைக்கூலிகள் மூலமாக குறித்த பிரதேச சபை உறுப்பினர் தாக்கப்பட்டுள்ளார் என்பதுவும் குறிப்பிடத்தக்கது. 

No comments