ரவூப் ஹக்கீம் - ரிஷாட் இணைந்தால் பாராளுமன்றில் 3ம் கட்சி
-அபூ ஜாஸி -
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மற்றும் ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸ் என்பன தேர்தல் கால கூட்டமைப்பாக செயற்படுமாயின் மொத்தமாக 18 க்கும் மேற்பட்ட ஆசனங்களை பெற்றுக் கொள்ள முடியும் என தற்போது கணிப்பிடப்படுகிறது.
இதன் பிரகாரம் பாராளுமன்றத்தில் கூடுதல் ஆசனங்களை கொண்ட 3ம் இடத்திற்கு இக்கூட்டமைப்பு முன்னேறும் என அவதானிக்கப்படுகிறது.
இதன் பிரகாரம் பாராளுமன்றத்தில் கூடுதல் ஆசனங்களை கொண்ட 3ம் இடத்திற்கு இக்கூட்டமைப்பு முன்னேறும் என அவதானிக்கப்படுகிறது.
------------------ஈஸ்ட் டைம்ஸ் கணிப்புக்களம் -----
நாட்டின் தேசிய நலனை முன்னிட்டு ரவூப் ஹக்கீம் மற்றும் ரிஷாட் கூட்டு மிக அன்னியோன்னியமாக செயற்பட்டு வருகின்றது. இந்நிலை தொடரவேண்டும் என சமூக ஆர்வலர்கள் கருதுகின்றனர். அதேவேளை தேர்தலுக்காக இக்கட்சிகள் இணைந்து கூட்டினையும் பட்சத்தில் 14 பாராளுமன்ற ஆசனங்களை வெல்ல முடிவதுடன் தேசியப்பட்டியலில் நான்கு ஆசனங்களை பெற்றுக் கொள்ள முடியும் என அவதானிக்கப்பட்டுள்ளது.
ஐ.தே.க சார்பில் இக்கட்சிகள் கூட்டாக களமிறங்கும் போது கிழக்கு மாகாணத்தில் 07 ஆசனங்களும்,
அம்பாறை மாவட்டத்தில் - 04 ஆசனங்கள்
மட்டக்களப்பு மாவட்டம் - 01 ஆசனம்
திருகோணமலை மாவட்டம் - 02 ஆசனங்கள்
கிழக்கிற்கு வெளியே 07 ஆசனங்களுமாக
புத்தளம் - 01
அனுராதபுரம் - 01
குருநாகல் - 01
கண்டி - 01
வன்னி - 02
கொழும்பு -01

அதேவேளை இலக்கப்படும் ஆசனங்களை தேசியப்பட்டியல் ஆசனங்களை பயன்படுத்திக்கொள்ள வாய்ப்புகளுமுள்ளன. அத்துடன் மிகப் புரிந்துணர்வுடன் செயற்பட்டால் இரு கட்சிகளும் தமது சொந்த ஆசனங்களை அதிகரித்துக் கொள்ள முடியும் என்பதும் கவனிக்கப்படவேண்டியதாகும்.
No comments