Header Ads

Breaking News

இலங்கை அணி 282 ஓட்டங்களை மட்டுமே பெற்றது


இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி நியூசிலாந்தின் வெலிங்டனில் நடைபெறுகின்றது. 


இந்தப் போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற நியூசிலாந்து அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது. 

அதன்படி, முதல் இன்னிங்சில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய இலங்கை அணி சகல விக்கட்டுக்களையும் இழந்து 282 ஓட்டங்களைப் பெற்றுள்ளது. 

இலங்கை அணி சார்பாக கருணாரத்ன 79 ஓட்டங்களையும் மெத்திவ்ஸ் 83 ஓட்டங்களையும் திக்வெல்ல ஆட்டம் இழக்காது 80 ஓட்டங்களையும் பெற்றுள்ளனர். 

பதிலுக்கு தமது முதலாவது இன்னிங்சை துடுப்பெடுத்தாடி வரும் நியூசிலாந்து அணி சற்று முன்னர் வரை 1 விக்கெட் இழப்பிற்கு 81 ஓட்டங்களை பெற்றுள்ளது.

No comments