2019 அரசியல் சிக்கலுக்கான ஆண்டு

2019 ஆம் ஆண்டு அரசியல் ரீதியாக நிலையற்ற மற்றும் சிக்கல் நிறைந்த ஆண்டாக இருக்கும் என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். 


இன்று (28) கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

பிரதமர் ரணில் விக்ரமசிங்க தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சியின் சில உறுப்பினர்களுக்கு நம்பிக்கை இல்லை என அவர் தெரிவித்துள்ளார். 

இதேவேளை ஐக்கிய தேசிய கட்சிக்குள் இருக்கும் சிக்கல் தற்போது அரசாங்க சிக்கலாக மாறியுள்ளதாகவும் அது அனைத்து மக்களையும் பாதித்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்

Post a Comment

0 Comments