Header Ads

Breaking News

நாளை இடைக்கால பட்ஜெட், ஜனவரியில் 2019 க்கான பட்ஜெட்


எதிர்வரும் 26 ஆம் திகதி இந்த ஆண்டுக்கான இடைக்கால வரவு செலவுத் திட்டத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதோடு  2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் ஜனவரி மாதத்தின் முதல் வாரத்தில் பாராளுமன்றத்துக்கு கைளிக்கவுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறப்பினர் எரான் விக்ரமரத்ன தெரிவித்தார். 
மேலும் எதிர்வரும் ஜனவரி மாத்துக்கு பின்னர் பாராளுமன்றத்தில் நிதி ஒதுக்கீடுக்கான அனுமதி கிடைக்கப் பெறாவிட்டால் நிதியினை செலவுசெய்யவோ நிர்வகிக்கவோ முடியாது. 
ஆகையால் சுகாதாரம் மற்றும் கல்வி போன்ற சேவைப்பிரிவுகளுக்கு அது பாரிய பிரச்சினையாக உருவெடுக்கும். அரச அதிகாரிகளின் கொடுப்பனவுகளிளும் பிரச்சினை ஏற்படும். எனவே எதிர்வரும் 48 மணித்தியாலங்களில் அமைச்சரவையை தெரிவசெய்வதுடன் இடைக்கால வரவு செலவுத்திட்டத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்போம் எனவும் தெரிவித்தார்.

No comments