அதாவுல்லாஹ்வின் கட்சியே முஸ்லிம்களிடம் அதிக ஆசனங்கள் பெறும் ; SB திசாநாயக்கே - East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Saturday, November 24, 2018

அதாவுல்லாஹ்வின் கட்சியே முஸ்லிம்களிடம் அதிக ஆசனங்கள் பெறும் ; SB திசாநாயக்கே



பொதுத்தேர்தலில் 60 சதவீதமான வாக்குகள் மைத்திரி, மஹிந்த கூட்டணிக்கே விழும் என ஆளுங்கட்சி பிரதம கொறடாவான அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க ஆருடம் கூறியுள்ளார்.
கண்டியில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் பற்கேற்று கருத்து வெளியிடுகையிலேயே அவர்  இவ்வாறு குறிப்பிட்டார்.
” நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிப்பதற்கு இன்னும் ஐந்து நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும். முக்கிய உறுப்பினர்கள் எம்முடன் இணையவுள்ளனர். உரிய நேரத்தில் , உரிய வகையில் அந்த சம்பவம் நடைபெறும்.
பொதுத்தேர்தலொன்று நடத்தப்பட்டால் எமக்கே வெற்றி நிச்சயம். 120 இற்கு மேற்பட்ட ஆசனங்கள் சகிதம் ஆட்சியமைப்போம். ஐக்கிய தேசியக்கட்சியால் 45 ஆசனங்களையே கைப்பற்றமுடியும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வாக்கு வங்கியும் சரியும். ஈ.பி.டி.பி. 4 ஆசனங்களைக் கைப்பற்றும்.
அதேபோல் மலையகத்தில் தொண்டமானே வாக்குவேட்டை நடத்துவார். தமிழ் முற்போக்கு கூட்டணியால் நுவரெலியாவில் ஒரு ஆசனத்தை மட்டுமே கைப்பற்றக்கூடியதாக இருக்கும். "முஸ்லிம் காங்கிரஸிடைவிட, அதாவுல்லாவின் கட்சி அதிக ஆசனங்களை வெல்லும்” என்றார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages