இன்று நபிகள் (ஸல்) அவர்களின் ஜனன தினம் - East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Monday, November 19, 2018

இன்று நபிகள் (ஸல்) அவர்களின் ஜனன தினம்


இஸ்லாத்தின் இறுதி இறைத் தூதர் முஹம்மத் நபி நாயகத்தின் பிறந்த தினமான மீலாதுன் நபிதினம் இன்றாகும். இன்றைய தினத்தின் சிறப்பு குறித்து கொழும்பு பெரிய பள்ளிவாசலின் பிரதம இமாம் மௌலவி தஸ்லீம் தெரிவித்ததாவது,

அகில உலகிற்கெல்லாம் அருட்கொடையாக இறைவனின் இறுதித் தூதராக அவனியில் வந்துதித்த அன்னலின் பெருமானார் முஹம்மது நபி ஸல்லலாஹு அலி ஸல் அவர்களின் பிறந்ததினத்தை இன்று அகில உலக முஸ்லிம்கள் அனைவரும் நன்றி உணர்வோடும் பக்திப் பரவசத்தோடும் நினைவு கூறுகின்றார்கள். 

சுமார் 1450 வருடங்களுக்கு முன் அதாவது கி.பி. 570 இல் மக்கமா நகரிலே பிறந்தார்கள் முஹம்மது நபி ஸல்லலாஹு அலி ஸல் அவர்கள். சிறுவயதிலேயே உண்மை பேசக்கூடியவராகவும் நம்பிக்கைக்கு உரியவராகவும் மக்கள் மத்தியில் பிரபல்யம் ஆனார்கள். இவரது நாற்பதாவது வயதில், இறைவன் தனது திருத் தூதராக அவர்களைத் தெரிவுசெய்துகொண்டார். பொறுப்புள்ள குடும்பத் தலைவராக, வீரமும் விவேகமும் மிக்க தளபதியாக, நெறி தவறாத நீதிபதியாக, அரசியல் வித்தகராக, ஆன்மீக வழிகாட்டியாக, நாட்டின் புகழ்மிக்க தலைவராக வாழ்ந்துகாட்டினார்கள் முஹம்மது நபி ஸல்லலாஹு அலி ஸல் அவர்கள். இந்தநாளில் மட்டுமல்லாது எந்தநாளிலும் தன் வாழ்க்கையிலே நபி ஸல்லலாஹு அலி ஸல் அவர்களின் முன்மாதிரிகளையும் சிறந்த வாழ்க்கையையும் நாம் நினைவுபடுத்தி, அவர்களின் முன்மாதிரிகளை எடுத்து வாழ்க்கையில் நடந்தால் நிச்சயமாக இறைவன் எம் அனைவருக்கும் சுபீட்சமான வாழ்வைத் தருவார். 

கஷ்டமும் நஷ்டமும் துன்பமும் இல்லாது நிம்மதியாக வாழக்கூடிய ஒரு அமைப்பை எங்களுக்கு வழங்குவார் எனத் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages