மக்களுக்காக தியாகம் செய்ய நாம் தயாராக இருக்கிறோம் - ஏ.எல்.எம்.நஸீர் எம்.பிஎல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே!! ஸலவாத் எனும் கருணையும், ஸலாம் எனும் ஈடேற்றமும் அகிலதிற்கு அருட்கொடையாக அனுப்பப்பட்ட ஈருலகத் தலைவர் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  அன்னவர்களின்  மீதும் அவர்களின் குடும்பத்தவர்கள், தோழர்கள் அனைவர் மீதும் உண்டாவதாக!!

இத்திருநாளில்,  அனைவருக்கும் எனது இதயங்கனிந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். உண்மையை பேசுதல், தூய எண்ணத்தோடு வாழ்தல், ஏழை எளியோருக்கு உதவி புரிதல், அனைவரிடத்தும் அன்புடனும், நற்பண்புடனும் பழகுதல், புகழையும் அறத்தையும் தராத செயல்களை செய்யாதிருத்தல் என்பது இறைத் தூதர் நபிகள் நாயகம் ஸல்லலாஹு அலைஹி வஸல்லம்  அன்னவர்கள்  உலகிற்கு நல்கிய போதனைகள் ஆகும்.

அன்பு இருந்தால் தான் பிறர்க்கு நாம் உதவ முடியும் என்பதனை உறுதியாக நம்பி அதன்படி வாழ்ந்து காட்டிய கண்மணி  நபிகள் நாயகம் ஸல்லலாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள்  போதித்த நல்வழிகளைப் பின்பற்றி, எங்கும் அமைதி நிலவிடவும், சகோதரத்துவம் தழைத்தோங்கிடவும் அனைவரும் ஒன்றுபட்டு உழைத்திட உறுதியேற்போம்.கஷ்டமும் நஷ்டமும் துன்பமும் இல்லாது நிம்மதியாக வாழக் இறைவன் எம் அனைவருக்கும் சுபீட்சமான வாழ்வைத் தருவானாக!! 

இந்தநாளில் மட்டுமல்லாது எந்தநாளிலும் தன் வாழ்க்கையிலே நபி நாயகம்  ஸல்லலாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின்  முன்மாதிரிகளையும் சிறந்த வாழ்க்கையையும் நாம் நினைவுபடுத்தி,அவர்களோடு சேர்ந்து உயர்தரமான  சுவனம் செல்லும்   பாக்கியத்தை எம் அனைவருக்கும் தந்தருள்வானக!! ஆமீன்

Post a Comment

0 Comments