About Me

header ads

நாம் ஐக்கிய தேசிய முன்னணியுடன் இணையவில்லை ; எம்.ஏ.சுமந்திரன் எம்.பி



அரசியலமைப்பு மீறப்படுவதை அங்கீகரிப்போமாக இருந்தால் தமிழ் மக்களின் நீண்ட கால அரசியல் தீர்வை எதிர்பார்க்க முடியாது போகும் என்று பாராளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன் கூறியுள்ளார். 


இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார். 



ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தை அமைக்க ஆதரவு வழங்குவது என்பது ஐக்கி தேசிய முன்னணியுடன் இணைகின்றோம் என அர்த்தப்படமாட்டாது என்றும் அவர் கூறினார். 



நாட்டின் குழப்பநிலை மாற வேண்டும் என்பதற்காக பொறுப்பான எதிர்க்கட்சி என்ற வகையிலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். 



ஜனாதிபதியினால் ஒக்​டோபர் 26ம் திகதி எடுக்கப்பட்ட தீர்மானமே நாட்டின் நெருக்கடி நிலைக்கு காரணம் என்றும் இதனால் நாட்டிற்காக எடுக்கப்பட்ட தீர்மானமே இதுவென்றும் எம். ஏ. சுமந்திரன் கூறியுள்ளார்.

Post a Comment

0 Comments