இலங்கை மக்களின் வாழ்வில் கரிநாள் ; துண்டுப்பிரசுரம் - East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Monday, November 26, 2018

இலங்கை மக்களின் வாழ்வில் கரிநாள் ; துண்டுப்பிரசுரம்

-பிராந்திய செய்தியாளர்  -

விடுதலைப்புலிகளின் மாவீரர் தினம் இலங்கை வாழ் மக்களின்  கரிநாள் என்ற தலைப்பில் துண்டுப்பிரசுரங்கள்  கிழக்கு மாகாணத்தின் பல்வேறு  பிரதேசங்களில் மக்களின் உரிமைக்குரல்  என்று உரிமை கோரி  வீதிகளில் எறியப்பட்டுள்ளன. 

பாஸிஸப் பயங்கரவாத விடுதலைப்புலிகளின்  முஸ்லிம் மக்களை கொன்று குவித்து மகிழ்ச்சியடைந்தததாகவூம் .அவர்கள்  பிள்ளைகளை கூட தாயின் கருவில் கூட வளரவிடாமல கருவில் வைத்து கொலை செய்ததாகவும், காத்தான்குடி பள்ளிவாயலில் தொழுது கொண்டிருந்த போது விடுதலைப்புலிகளால் செய்யப்ட்ட படுகொலைகளையூம் மற்றும் ஏறாவூரில் படுகொலைகளையூம் சுட்டிகாட்டியூம் அந்த புகைப்படங்களை மறுபக்கத்தில் அச்சிட்டும் வெளியிடப்பட்டுள்ளது.

 விடுதலைப்புலிகளின் உறுப்பினர் இன்பராசா முஸ்லிம் மக்களிடம் ஆயூதம் இருப்பதாக பொய் வதந்திகளை பரப்பியதாகவூம்  ;அச்செயல்   பயங்கரவாத நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கும்  இந்த அரசாங்கத்தை திசைதிருப்பதற்காக செய்யப்பட்டதாகவூம் அத்துண்டுப்பிரசுரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது .  மற்றும் இது ஒரு புலம் பெயர் விடுதலைப்புலிகளின் மாவீரர் தினமாக இருக்கின்றதாகவூம்  இது விடுதலைப்புலிகள் மீண்டும் உருவாகுவதற்கு வழிவகுக்கும் என்றும்  முன்னாள் விடுதலைப்போராளிகள் வீதிக்கு வந்து பயங்கரவாதம் செய்வதாகவூம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கை வாழ் முஸ்லிம் மக்கள் இடம் பிடிக்கின்றார்கள் காணி கொள்ளைகளில் ஈடுபடுகின்றார்கள் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பினர் கோசமிட்டு வருவதகாவூம் ஆனால் விடுதலைப்புலிகளின் மாவீரர்  துயிலும் இல்லத்துக்கு  அரசாங்கம் தனியிடம் கொடுப்பதகாவூம்  தரவை ,மாவடி முன்மாரி, வாகரை, கண்டலடி,கஞ்சிக்குடிச்சாறு  என்ற இடத்தில் விடுதலைப்புலிகளுக்கு தனியிடம் கொடுத்துள்ளதாகவூம் .இதற்கு அராசங்கத்திலுள்ள வாகனங்கள் ஊழியர்களை பயன்படுத்தி மாவீரர் துயிலும் இடத்தை அமைத்துள்ளதாகவம் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் இத்துண்டுப்பிரசுரத்தில் அரசாங்கத்தினதும் அதனோடு தொடரபுடைய பொலிசார் மற்றும் முப்படையினர் மீது பல்வேறு கேள்விகள் தொடுக்கப்பட்டுள்ளது .நவம்பர் மாதம் 27 ம் திகதி  நடைபெறவிருக்கும் மாவீரர் தினத்தை ஒரு கரிநாளாக நினைவூ+ட்டி கருப்புக் கொடிகளை கடைகளிலும் வீடுகளிலும் வாகனங்களிலும் பறக்கவிடுமாறு அத்துண்டுப்பிரசுரத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages