Header Ads

Breaking News

ரணிலின் ஆட்டம் ஆரம்பம் ; மஹிந்த ஆட்சி கவிழ்ந்தது !!!



மகிந்த ராஜபக்ச அமைச்சரவையில் பிரதியமைச்சராக பதவியேற்ற காலி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மனுசநாணயக்கார தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் இதனை தெரிவித்துள்ள அவர் சட்டவிரோத அரசமைப்பிற்கு முரணான நடவடிக்கைகளிற்கு துணைபோகக்கூடாது என்ற முடிவிற்கு வந்துள்ளேன் என தெரிவித்துள்ளார்.
மனுச நாணயக்கார தனது கடிதத்தில் மேலும் தெரிவித்துள்ளதாவது
மகிந்த ராஜபக்சவை நீங்கள் பிரதமராக நியமித்து பாராளுமன்ற அமர்வுகளை இடைநிறுத்தியதை தொடர்ந்து கடந்த சில நாட்கள் குழப்பம் மிகுந்தவையாக காணப்படுகின்றன.
அவ்வேளை நான் உங்களுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டேன்,நீங்கள் தெரிவித்ததை ஏற்றுக்கொண்டு புதிய அரசாங்கத்தில் பிரதி அமைச்சராக பணியாற்றும் அரசியல் முடிவையெடுத்தேன்

No comments