Header Ads

Breaking News

மிலேச்சத்தனம் கொண்டவர்களை நாம் வெற்றி கொண்டிருக்கின்றோம் ; ரவூப் ஹக்கீம் எம்.பி

பாராளுமன்றத்தின் இறைமையையும், நாட்டின் ஜன நாயகத்தையும் கேள்விக்கு உட்படுத்துகின்ற மிக மோசமான அரசியல் கலாசாரத்தை இன்று நமது பாராளுமன்றம் கண்டிருக்கின்றது என முஸ்லீம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். 

நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில் இன்று நாடாளுமன்றில் வாதத்திற்கு எடுக்கப்பட இருந்த விடயங்களை தோற்கடிக்கவே இந்த யுக்கிதை பயன்படுத்தியுள்ளார்கள். பாராளுமன்ற உறுப்பினர்கள் என்ற போர்வையில் சில காடைத்தனமாவர்களின், அயோக்கியர்களின் செயற்பாடுகள் இன்று பாராளுமன்றில் அரங்கேறியுள்ளது. இதனை முழு நாடும், சர்வதேசமும் தெளிவாக கண்டு கொண்டது. 

இன்று நம்பிக்கையில்லா பிரேரணை நிலையியற் கட்டளைக்கமைவாக சபாநாயகரால் உரக்க அறிவிக்கப்பட்டு தனித்தனியாக கேள்வி கேட்க அவகாசமின்மையினால் மொத்தமாக உரத்த தொனியில் சம்மதம் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது (voice vote முறையில்)இதன்படி இப்போதைய அரசாங்கத்தின் மீது செல்லுபடியாக கூடிய வகையில், சட்டப்படியான முறையில் நம்பிக்கையில்லாப் பிரேரணை நிறைவேற்றப் பட்டுள்ளது என மேலும் அவர் கூறினார்.

No comments