Header Ads

Breaking News

அதிரடி அலசல்; பொதுத் தேர்தலை நோக்கி நகர்த்தப் படுகிறோமா ???



-அஹ்னப் ஜாஸி - 

பாராளுமன்றை கலைத்து பொதுத் தேர்தல் ஒன்றுக்கு செல்வதற்கான நியாயங்களை நிரூபிக்கின்ற முஸ்தீபுகளே இப்போது நடைபெறுகின்றன என்பது தெள்ளத்தெளிவாகியுள்ளது. 

உச்ச நீதிமன்றின்  தடை உத்தரவை தொடர்ந்து பாராளுமன்றை ஒத்திவைப்பதில்லை என்கின்ற ஜனாதிபதியின் தீர்மானம் மற்றும் நம்பிக்கையில்லா பிரேரணையை ஏற்றுக் கொள்ளாமை என்பன இதற்கான சான்றுகளாகும். ஏனெனில் ஜனாதிபதியினால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது போன்று பாராளுமன்ற அமர்வுகள் மிக மோசமான முடிவுகளையே வெளியே காட்டுகின்றன. எனவே ஜனாதிபதியினால் பாராளுமன்றை கலைக்க வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலானது மிக பெறுமதியானதாகின்றது.

அதேவேளை, மீண்டும் பிரதமராக மஹிந்தவை நியமிக்க அல்லது பெரும்பான்மை ஆதரவை காட்டுவதற்கு ஜனாதிபதி பொது பெரமுன உடனான சந்திப்பில் நேற்றைய தினம் (16.11.2018) குறிப்பிட்டுள்ளமையும் கவனிக்க வேண்டியதாகும். ஐ.தே.க யின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக நியமிக்க முடியாது என்பதில் ஜனாதிபதி மைத்ரி காட்டும் உறுதியான நிலைப்பாடு யூகிக்க முடியாத பல செய்திகளை சொல்கிறது. விசேடமாக ஸ்திரமான அரசொன்றை ஸ்தாபிப்பதில் இரு தரப்பினருக்கும் முடியாத நிலை உள்ளதால் பாராளுமன்றை கலைக்குமாறு நீதிமன்றை கோர முடியுமாகவிருக்கும்.

பொது அமைதி, நாட்டின் நற்பெயருக்கு குந்தகம் , அரச நிருவாக முடக்கம், பொருளாதார முடக்கம், சர்வதேச அழுத்தங்கள் என அடிப்படை விதிகள் தொடர்பிலான விசாரணை பன்முகப்படுத்தப்படலாம். 
இயற்கை விதிகள் இக்காரணிகளுக்கு மிகவும் பலம் சேர்க்கும் அடிப்படை கொள்கை விதிமுறையாகும்.

பாராளுமன்ற தேர்தலொன்றை முழு வடக்கு, கிழக்கு மாகாணமும் ரணில் தரப்பாக அல்லது மஹிந்த எதிர்ப்பு முகமாகவே எதிர்கொள்ளவுள்ளது. இந்நிலையில் வடக்கு கிழக்கின்றிய ஆட்சியமைப்பு மிக அரிதானதாகவே வாய்ப்புகளைக் கொண்டுள்ளது. அவ்வாறு அமைந்திருப்பின் சிறுபான்மையினருக்கு  அது மிக சிக்கலான ஒன்றாகவே அமையும் என்பது மிகத்  தெளிவாகும். 

No comments