About Me

header ads

நாட்டின் ஜனநாயகத்தை முஸ்லீம் காங்கிரஸ் பாதுகாத்திருக்கிறது; ஏ.எல்.எம்.நஸீர் எம்.பி


- பெஹஷார்ட் ஜாஸி -

முஸ்லீம் மக்களின் நலனை மாத்திரமல்ல, முழுத்தேசியத்தினதும் மரியாதையை முஸ்லீம் காங்கிரஸ் காப்பாற்றி இருக்கின்றது என முஸ்லீம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீர் தெரிவித்தார். 

அட்டாளைச்சேனை பிரதேசத்தில் இன்று (2018.11.18) காலை 8.30 மணியளவில் வீதி அபிவிருத்தி ஆரம்பிப்பு வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார். 

மேலும் அவர் தனது உரையில் 

"நாம் நமது பிரதேசத்தில்  மாத்திரமல்ல இலங்கையின் எல்லாப்பாகத்திலும் அபிவிருத்தித் திட்டங்களையும் மக்களின் அன்றாட  தேவைகளுக்கும் முன்னுரிமை கொடுத்து செயற்பட்டு வந்தோம். ஒரு நாளின் ஒரு கணப்பொழுதில் ஆட்சி மாற்றம் நிகழ்கின்றது. மக்கள் அங்கீகாரம் பெற்ற உயர் சபை கலைக்கப்படுகின்றது. இவை ஒரு ஜனநாயக நாட்டிற்கு பொருத்தமானவைகளா ?

மக்கள் இன்று பெரிதும் குழப்பத்திற்குள்ளாகி இருக்கிறார்கள். என்ன நடக்கப்போகிறது என்பது தெளிவாகவில்லை. ஜனாதிபதி எல்லா அதிகாரங்களையும் தன்  வசப்படுத்துகிறார். 19ம் திருத்தச் சட்டம் வலுவற்றதாகிறது. நிறைவேற்றப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை செல்லுபடியற்றதாகின்றது. பெரும்பான்மையுள்ள ஒரு கட்சியை ஜனாதிபதி ஏற்க மறுக்கிறார். மக்கள் ஆணை உதாசீனம் செய்யப்படுகிறது .

மேலும் நாம் நமது மக்களின் தேவைகளையும், உரிமை சார்ந்த பிரச்சனைகளையும் ஜனநாயக போராட்டங்கள் மூலமாகவே வெற்றி கொள்ள முடியும். அவ்வாறென்றால் நமது தேவைகளை அடைந்து கொள்ள ஜனநாயக நீரோட்டத்தில் பயணிக்க வேண்டியுள்ளது. நாங்கள் ரணில், மைத்திரி, மஹிந்த என்ற தனி நபர்களை விடுத்து ஜனநாயகத்திற்கான போராட்டத்தில் வலுவாக காலூண்றியுள்ளோம். நமது எதிர்காலம் குறித்து 12 பாராளுமன்ற உறுப்பினர்களும் மிக தெளிவான தலைமையினால் வழி நடாத்தப்படுகின்றோம். 

தேர்தல் ஒன்று வருமாக இருந்தால் அதனை மிக மகிழ்ச்சியோடு நாம் வரவேற்க தயாராக இருக்கிறோம். நமது மக்களும் மிக தெளிவாக ஜனநாயக விரோதிகளுக்கு பாடம் புகட்டுவார்கள்" என்றார் .

Post a Comment

0 Comments