About Me

header ads

தேர்தல்களை பிற்போட்டமையே அரசியல் நெருக்கடிக்கு காரணம் ; தலைவர் ரவூப் ஹக்கீம்



அரசியல் ரீதியில் அனாதரவாக்கப்பட்டவர்களுக்காக பெரும்பான்மை மக்களின் ஆணையை மீறி நடக்க முடியாது என முஸ்லீம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். 

அரசியலில் மக்களால் புறக்கணிக்கப்பட்டவர்களின் அபிலாசைகளை நிறைவேற்றும் நோக்குடன் நாம் செயற்பட முடியாது. மாயாக்களின் ஏகோபித்த ஆணையை கொண்டே இவ்வாட்சி அமைய பெற்றிருக்கின்றது. எனவே இலகுவில் யாரும் இதனை விட்டுக் கொடுக்க முடியாது. 

ஐக்கிய தேசிய கட்சியில் பல்வேறு மாறுதல்களை மக்கள் எதிர்பார்க்கிறார்கள், அவ்வாறான மாற்றத்துடன் மக்களை சந்திக்கின்ற பொழுது அவர்கள் மாற்றத்திற்கான ஆணையை வழங்குவார்கள் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. ஜனநாயகத்தை குழிதோண்டி புதைத்து விட்டு அரசியல் செய்வது கேலிக்கூத்தானது. 

மக்களின் ஆணைகளுக்கான தேர்தல்களை பிற்போட்டு வந்தமையே இவ்வாறான அரசியல் நெருக்கடிக்கான காரணம் என்பதை ஏற்றுக் கொண்டே ஆகவேண்டும். சிலர் தாம் வகுத்துக் கொண்டு கடந்து வந்த பாதையை மறந்து நிறைவேற்று அதிகாரத்தின் பின்னால் செல்கின்றனர். இது நாட்டு மக்களுக்கும், அரசியல் ஜனநாயகத்திற்கும் பொருத்தமானதல்ல. 

இந்நாட்டில் ஐக்கிய தேசியக் கட்சியே பலமான கட்சி. சிலமாற்றங்களை தலைமைக்கு நாம் பரிந்துரைத்துள்ளோம். அதன் மூலம் எவ்வாறான சவால்களையும் முறியடிக்க நாம் தயாராக இருக்கின்றோம் என மேலும் குறிப்பிட்டார். 

Post a Comment

0 Comments