Header Ads

Breaking News

ரயிலில் அதிரடி ; யாசகம் , வியாபாரிகள் கைது


ரயிலில் வர்த்தக நடவடிக்கைகள் மற்றும் யாசகங்கள் பெறுவோரை கைதுசெய்வதற்கான நடைமுறையொன்று இன்று முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களத்தின் பாதுகாப்பு அதிகாரி அனுர பிரேமரத்ன தெரிவித்துள்ளார்.

அத்துடன் குறித்த நடவடிக்கையை சிவில் உடையில் மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
ரயில்வே திணைக்களத்தின் சட்டத்தன் பிரகாரம் ரயில்களில் யாசகம் மற்றும் வியாபாரம் மேற்கொள்ளுதல் போன்ற தடை விதிக்கப்பட்ட போதிலும், சிலர் விதிமுறைகளை மீறி தொடர்ந்தும் செயற்பட்டு வருகின்றனர். 
இந் நிலையிலேயே மேற்கண்ட தீர்மானம் இன்று முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாகவும் ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. 

No comments