Comments System

header ads

ரூபாவின் பெறுமதி அதிகரிக்கிறது ; மஹிந்தவா காரணம் ???


அமெரிக்க டொலர் ஒன்றுக்கான விற்பனை மற்றும் கொள்வனவு பெறுமதிப்படி இலங்கை ரூபாவுக்கான பெறுமதி இன்று அதிகரித்துள்ளது. 
இலங்கை மத்திய வங்கியினால் இன்று வெளியிடப்பட்டுள்ள தகவலின் படி அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 175.82 ரூபாவாக பதிவாகியுள்ளது. 
இதேவேளை, நேற்றையதினம் இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட அமெரிக்க டொலர் ஒன்றுக்கான விற்பனை மற்றும் கொள்வனவு பெறுமதிப்படி இலங்கை ரூபாவுக்கான பெறுமதி 177.32 ரூபாவாக  காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 
ஆட்சி மாற்றத்தின் பின்னரும் இவ்வாறான நிலைமை தோன்றியிருப்பதானது மஹிந்த மீதான சர்வதேச நம்பிக்கையை வெளிப்படுத்துவதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். அத்துடன் மஹிந்த ஆட்சி இலங்கைக்கு பொருத்தமானது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அண்மைக்காலமாக அமெரிக்க டொலர் ஒன்றுக்கான ரூபாவின் பெறுமதி தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வந்த நிலையில், இன்று ரூபாவின் பெறுமதி அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Post a Comment

0 Comments