இன்றைய நாடாளுமன்ற அமர்வு ; மீண்டும் ரணில் பிரதமர் - East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East

East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East

East Times:

Windows

test banner

Breaking News

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Tuesday, November 13, 2018

இன்றைய நாடாளுமன்ற அமர்வு ; மீண்டும் ரணில் பிரதமர்

- அபூ அஹ்நப் ஜாஸி -

ஜனாதிபதியின் வர்த்தமான அறிவித்தலுக்கெதிராக மீ உயர் நீதிமன்றம் வெளியிட்டுள்ள தற்காலிக தடை உத்தரவை தொடர்ந்து இன்று காலை 10.00 மணிக்கு பாராளுமன்றம் கூடும் என சபாநாயகர் அறிவித்துள்ளார். 

அதேவேளை புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ச பதவி விலக மாட்டார் என அவரது புதல்வரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். 

இந்நிலையில், பெரும்பான்மைப் பலம் இல்லாததனாலேயே பாராளுமன்றம் கலைக்கப்பட்டதாக செய்திகள் வெளிவந்திருந்தன. இவ்வாறான சந்தர்ப்பத்தில் பாராளுமன்றில் பிரதமர் ஆசனம் யாருக்கு சொந்தம் மற்றும் அறுதி பெரும்பான்மை இன்று யார் பக்கம் அமைய போகின்றது என்ற கேள்விகள் எழாமலில்லை.

எது எவ்வாறிருப்பினும் "ஐ.தே.மு தனது பெரும்பான்மை பலத்தை  த.தே.கூ , ஜே.வி.பி மற்றும் ஸ்ரீ.ல.மு.கா ஆகிய கட்சிகளின் உறுதியான ஆதரவுடன் தக்கவைக்கும்" என்றே எதிர்பார்க்கப் படுகின்றது. அறுதி பெரும்பான்மை இல்லாத பட்சத்தில் மீண்டும் ரணில் விக்ரமசிங்க தலைமையியலான ஐ.தே.மு ஆட்சியமைப்பதற்கான வாய்ப்புகள் எழும். அத்துடன் ஜனாதிபதியே பெரும்பான்மை அணியின் தலைமை தாங்கும் பா.உ வை பிரதமராகவும் , சிபாரிசு செய்யப்படும் பா.உ க்களை அமைச்சர்களாகவும் நியமிக்க வேண்டும். 

தடை உத்தரவுக்காக தீர்ப்புகள் வரும் வரையில் தேர்தல் நடவடிக்கைகள் செல்லாது, பாராளுமன்றம் கலைக்கப்படவில்லை என்றால் அதன் அன்றாட நடவடிக்கைகளை தொடரும் அதிகாரம் அதற்கு உண்டு, அதேவேளை பாராளுமன்றம் கூடும் போது பெரும்பான்மை இல்லாத அரசு நாட்டை ஆளும் நிலை அரசியலைப்புக்கு விரோதமானது இந்நிலை எவ்வாறு தவிர்க்கப்படும். பெரும்பான்மை இல்லாத நிலையில் மஹிந்த பதவி விலகுவதே தார்மீகமும், சட்ட ரீதியிலானதுவும்.

பெரும்பான்மை மக்களின் பெரும்பான்மை ஆதரவு கொண்ட மஹிந்த ராஜபக்ச பதவி விலகுவது மீண்டும் அவர் மீதான எதிர்பார்ப்பை அதிகமாக்கும். இவற்றுக்கெல்லாம் விடை இன்றைய அமர்வின் பின்னர் தெரிந்து கொள்ளலாம் ???

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here