நேற்றைய செய்திகளின் சுருக்கம் - East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East

East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East

East Times:Bringing news stories from Sri Lanka

தலைப்புச் செய்திகள்

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Tuesday, November 20, 2018

நேற்றைய செய்திகளின் சுருக்கம்


01. பாராளுமன்றத் தேர்தல் தொடர்பில் நாம் அச்சமடையவில்லை. எனினும், பொதுத் தேர்தலையும் ஜனாதிபதித் தேர்தலையும் ஒன்றாக நடத்துமாறே நாம் கோருகின்றோம் என ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளர் நவீன் திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
02. அரசாங்கம் ஒன்று இல்லாத சந்தர்ப்பத்தில் பிரதமரால் வழங்கப்படும் உத்தரவுகளுக்கு ஏற்ப பணத்தை செலவு செய்ய முடியாது என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.
03. டிசம்பர் 31ஆம் திகதிக்கு முன்னர் இடைக்கால கணக்கு அறிக்கையையோ அல்லது வரவு செலவுத் திட்டத்தையோ சமர்ப்பிக்காவிட்டால், 2019ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதியிலிருந்து அனைத்து அரச செயற்பாடுகளும் ஸ்தம்பிதமடையும் நிலை ஏற்படும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர குறிப்பிட்டார்.
04. மேல் மாகாணசபையின் வரவுசெலவுத் திட்டம் நேற்று முன்தினம் (19) சபையில் சமர்ப்பிக்கப்பட்ட சந்தர்ப்பத்தில், சபையில் இருந்த கணினியில் சில உறுப்பினர்கள் ஆபாசக் காட்சிகளைப் பார்வையிட்டமை தொடர்பில் முதலமைச்சர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளார்.
05. இறை தூதராம் முஹம்மது நபி அவர்களின் ஜனன தினமான மீலாதுன் நபி தினம் நேற்று கொண்டாடப்பட்ட நிலையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வாழ்த்துச் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார்.
வௌிநாட்டுச் செய்திகள்
01. இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய குற்றவாளிகளை விடுவிப்பது தொடர்பில் ஆளும் அ.தி.மு.க. ஏன் ஆளுநரை வலியுறுத்தவில்லை என திராவிட முன்னேற்றக் கழகம் கேள்வியெழுப்பியுள்ளது.
02. அமெரிக்காவிற்குள் அனுமதியின்றி நுழையும் குடியேறிகளை எல்லைப்பகுதியில் தடுத்துநிறுத்த ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பிறப்பித்த உத்தரவிற்கு நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
விளையாட்டுச் செய்திகள்
01. பந்தை சேதப்படுத்திய குற்றச்சாட்டில் ஓராண்டு போட்டித் தடையை அனுபவித்து வரும் ஸ்டீவன் ஸ்மித் உள்ளிட்ட வீரர்களின் தடை தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என அவுஸ்திரேலிய கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது.
02. இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இலங்கை குழாத்தில் சுழற்பந்து வீச்சாளரான நிஷான் பீரிஸ் பெயரிடப்பட்டுள்ளார்.
அகில தனஞ்சயவின் வெற்றிடக்குக்கு பதிலாகவே அவர் இலங்கை குழாத்தில் இணைக்கப்பட்டுள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages