Header Ads

Breaking News

மக்கள் எதிர்பார்ப்பை ஜனாதிபதி நிறைவேற்ற வேண்டும் ; சிரேஷ்ட சட்டத்தரணி எஸ்.எம்.ஏ.கபூர்


மக்களால் வழங்கப்பட்ட ஆணையை ஜனாதிபதி மைத்திரி பாலா சிறிசேன தான்தோன்றித்தனமாக பயன்படுத்துவதாக சிரேஷ்ட சட்டத்தரணியும், முஸ்லீம் காங்கிரசின் பிரதித்தலைவருமான எஸ்.எம்.ஏ. கபூர் கூறியுள்ளார். 

மேலும் அவர் கருத்து வெளியிடுகையில் "மக்கள் பல போராட்டங்களுக்கு மத்தியில் பலத்த எதிர்பார்ப்புடனேயே நல்லாட்சி அரசுக்கு வித்திட்டனர். யாரை ஆட்சியில் இருந்து இறக்கி மக்களாட்சி நிலவ வேண்டும் என மக்கள் ஆணை வழங்கினார்களோ அந்த அணியையே பின் கதவால் அழைத்து இன்று ராஜ மகுடத்தை ஜனாதிபதி அணிவித்துள்ளார். இது மனித தன்மைக்கு அப்பாற்பட்டது. இயற்கை விதிகளுக்கு முரணானது என்றே நான் கருதுகின்றேன். 

சர்வதேசம்  நமது அதள பாதாள நிலைமைப் பொருளாதாரத்தை பெரிதும் நிலை நிறுத்தும் நோக்குடன் பாரிய உதவிகளை நமக்கு செய்துள்ளன இருப்பினும் இவ்வாறான செயற்பாடுகள் மூலமாக நாம் மீண்டும் பின்னோக்கிச் செல்லவேண்டிய கட்டாயத்திற்கு உற்பட்டுள்ளோம்.  இது நமது மக்கள் மீதான சுமையை மேலும் அதிகமாக்கும் செயலாகும். 

மக்களின் மன நிலையை கருத்திற்கொள்ள வேண்டிய கடப்பாடு ஜனாதிபதிக்கு இருக்கின்றது. உச்ச நீதி மன்றம் வழங்கியுள்ள இடைக்கால தடை உத்தரவை நிரந்தர மான தீர்ப்பாக நமது எதிர்கால சந்ததியினருக்கு விட்டுச்செல்ல வேண்டும். நமது நாடு ஜனநாயகத்தின் பாலும் நீதித்துறையின் மேலும் வைத்துள்ள நம்பிக்கையை உறுதி செய்ய வேண்டும். அதற்காக எத்தகைய தியாகம் ஒன்றினையும் செய்ய ஜனாதிபதி முன்வந்து முன்னுதாரணமாக செயற்பட வேண்டும் என்றே மக்கள் விரும்புகின்றனர். எனவும் கூறினார்  

No comments