Comments System

header ads

ஆட்சி மாற்றத்தில் முஸ்லீம் காங்கிரசின் இறுதி முடிவு


முஸ்லீம் காங்கிரஸ் ஆட்சிமாற்றம் தொடர்பிலான தமது கருத்துக்களை முன்வைத்துள்ளது. 

இன்று பாராளுமன்ற குழு அறைகளில் இடம்பெற்ற ஐ.தே.க சார்பான  பெரும்பான்மையை உறுதிப்படுத்தும் கூட்டத்தில் கலந்து கொண்ட போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். 

பிபிசி நிருபருக்கு பதிலளித்த பாராளுமன்ற உறுப்பினரும், ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் அவர்கள் மேலும் அங்கு கருத்து தெரிவிக்கும் போது,

எமது வரலாற்றில் மிக மோசமான அரசியல் பழிவாங்கல் முயற்சியாகவே நாம் ஜனாதிபதி மைத்ரி பாலா சிறிசேன அவர்களினால் ஏற்படுத்தப்பட்டுள்ள இவ் ஆட்சி  மாற்றத்தை பார்க்கிறோம். இது மிக மோசமான இழிவான அரசியல் கலாச்சாரமாகும். இதனை அரசியலமைப்புக்கு அப்பால் சென்று வேண்டுமென்றே செய்திருக்கிறார். 

எதிர்வரும் 7ம் திகதி கூடவிருக்கும் பாராளுமன்ற அமர்வில் நாம் நமது பெரும்பான்மையை நிரூபிப்போம். அப்போது இந்தக் களவழி அரசாங்கம் தனது முகத்தை தொங்கபோடும். என்கிறார். 

Post a Comment

0 Comments