ஞானசாராவுக்கு விரைவில் விடுதலையா ???


பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் ஞானசார தேரரின் விடுதலை தொடர்பில் விரைவில் தீர்க்கமான தீர்வினை அளிப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளதாக ராவண பலய அமைப்பின் பொதுச்செயலாளர் இத்தானந்தே சுகத தேரர் தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
சிறைவாசம் அனுபவித்து வரும் பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரரை விடுதலை செய்யுமாறு கடந்த காலங்களில் மேற்கொண்ட முயற்சிகள் எவ்விதமான மாற்றத்தினையும் ஏற்படுத்தவில்லை.
நேற்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து ஞானசார தேரரின் விடுதலை தொடர்பில் கவனம் செலுத்துவாறு கோரிக்கை விடுக்கவே அனைத்து பிக்குகளும் ஜனாதிபதி செயலகத்தின் முன்னிலையில் அமைதியான போராட்டத்தினை மேற்கொண்டோம். 
ஆனால் பொலிஸாரே அமைதியான ஒன்று கூடலை போராட்டடமாக மாற்றியமைத்து விட்டனர் எனவும் அவர் தெரிவித்தார்.

Post a Comment

0 Comments