Header Ads

Breaking News

முஸ்லீம் தூதுவர்களுடன் அவசர சந்திப்பு


இலங்கையில் இடம்பெற்று வரும் அரசியல் சிக்கல் தொடர்பிலாக  முஸ்லீம் அரசியல் தலைவர்கள்  முஸ்லீம் நாடுகளின் இலங்கைக்கான பிரதிநிதிகளை இன்றுகாலை சந்தித்துள்ளனர்.

இலங்கையின் மூத்த முஸ்லீம் பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒருவரான பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். பௌஸியின் வீட்டில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த இந்தச் சந்திப்பில்,  ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாத் பதியுதீன் மற்றும் அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் இந்த சந்திப்பில் கலந்து கொண்டிருந்தனர். 

இலங்கைக்கான இஸ்லாமிய நாடுகளின் தூதுவர்கள் இலங்கையின் தற்போதைய நிலைமை தொடர்பில் கேட்டறிந்து கொள்ள வேண்டும் என விடுத்திருந்த கோரிக்கைக்கு ஏற்ப இந்த சந்திப்பு இடம்பெற்றதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் அமீர் அலி செய்தியாளர்களுக்கு  தெரிவித்துள்ளார்.  நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமை தொடர்பில் தூதுவர்களுக்கு இதன்போது விளக்கியதாக அவர் மேலும் கூறினார். 

அதேவேளை ஏ.எச்.எம்.பௌசி மீண்டும் சுதந்திரக் கட்சியில் இணைந்து கொள்ளவுள்ளதாக கதகவல்கள் தெரிவிக்கப்பட்ட நிலையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

No comments