Header Ads

Breaking News

இன்று வெள்ளிக்கிழமை ஜனாதிபதியின் முக்கிய சந்திப்புக்கள்



ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் மற்றும் ஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களை சந்தித்து இன்று  தினம் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் பிரச்சினை தொடர்பாக ஜனாதிபதிக்கும் சபாநாயகருக்கும் ஜனாதிபதி செயலகத்தில்  நேற்று  மாலை 4 மணியளவில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. 
சுமார் அரை மணி நேரம் இடம்பெற்ற இந்த சந்திப்பின்போது, அரசியல் நெருக்கடியை  விரைவில்  சுமுகமான  முறையில்  தீர்த்துக்கொள்வது குறித்து  இருவரும்  தீவிரமாக ஆராய்ந்தனர். 
அத்துடன் இச் சந்திப்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன்   ஆளும்கட்சியின்  முக்கியஸ்தர்கள் சிலரும் பங்கேற்றதாக  தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போதே நாளைய தினம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரையும், ஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளிக் கட்சிளின் தலைவர்களையும் ஜனாதிபதி சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த தீர்மானம் மேற்கொண்டார். 
அத்துடன் ஜனாதிபதிக்கும் சபாநாயகருக்குமிடையிலான மேற்படி சந்திப்பின்போது, நாட்டில் ஏற்பட்டுள்ள  அரசியல்  குழப்ப நிலைமைக்கு   விரைவில் தீர்வுகாண  வேண்டுமென்றும்  பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து வருவதாகவும் ரூபாவின் பெறுமதி தொடர்ச்சியாக வீழ்ச்சி அடைந்து வருவதாகவும் ஸ்திரமற்ற நிலைமை நீடிப்பதற்கு இடமளிக்கக்கூடாது என்றும் சபாநாயகர் ஜனாபதியிடம் எடுத்துரைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments