Header Ads

Breaking News

ஐ.ம.சு. கூ எம்.பி க்கள் அட்டகாசம்; பாராளுமன்றம் ஒத்திவைப்பு



தற்போது ஐ.ம.சு.கூ பாராளுமன்ற உறுப்பினர்கள் நடந்து கொண்டுள்ள விதமானது இலங்கை வாழ் மக்கள் அனைவரின் முகத்திலும் சேறு பூசுவதாய் அமைந்துள்ளதாக இலங்கையின் முக்கிய அரசியல் ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 

பாராளுமன்றில் நேற்றைய தினம் பாலித தேவப்பெருமா எம்.பி நடந்து கொண்ட விதம் தொடர்பில் அவரை கைது செய்ய கோரி பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் சபாநாயகர் ஆசனத்தில் அமர்ந்து கொண்டதுடன், ஏனைய ஐ.ம.சு.கூ உறுப்பினர்கள் ஆசனத்தை சுற்றி வளைத்து கொண்டுள்ளனர். 

இதேவேளை, போலீசார் பாதுகாப்புடன் பாராளுமன்ற உறுப்பினர்கள் சபாவுக்குள் சபாநாயகர் உள் நுழைந்தமை மேலும் நிலைமையை சிக்கலாக்கியத்துடன் போலீசார் மீதும் சபாநாயகர் மீதும் நீர் போத்தல்கள், கறி, மற்றும் புத்தகங்களைக் கொண்டு தாக்கியத்துடன் சபாநாயகர் ஆசனத்தையும் நிர்மூலமாக்கினர். 

இதனைத் தொடர்ந்து பாராளுமன்ற செயற்பாடுகள்  நடைபெறாமல் சற்று முன் ஒத்திவைக்கப்பட்டது. 

No comments