Header Ads

Breaking News

இஸ்ரேலின் வஞ்சகம் ; பேச்சுவார்த்தைக் காலத்தில் தாக்குதல்



காஸா எல்லையில் இஸ்ரேலிய படைகளுகளின் வஞ்சக தாக்குதல்களில் போது இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களில் 8 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
கடந்த திங்கட்கிழமை இரவு முதல் இதுவரை பலஸ்தீன ஆயுதக் குழுக்களால், இஸ்ரேலை நோக்கி 460க்கும் அதிக ரொக்கெட் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்ற குற்றச்சாட்டினை முன் வைத்து பாலஸ்தீனத்தின் மீது வஞ்சகமான முறையில் தாக்குதல் ஒன்றை இஸ்ரேல் நிறைவேற்றியுள்ளது. 
பலஸ்தீனின் 160 இராணுவ நிலைகள் மீதும், முஸ்லீம் குடியிருப்புக்கள் மீதுமாக  இஸ்ரேல் விமானத் தாக்குதல்களை நடத்தியுள்ளது.
இந்தத் தாக்குதல்களில் 7 பலஸ்தீன ஆயுததாரிகளும் ஒரு சிவிலியனும் கொல்லப்பட்டுள்ளனர். அத்துடன் பல நூற்றுக்கணக்கானோர் காயங்களுக்குட்பட்டுள்ளனர்.
இதேவேளை, இருதரப்பினருக்கும் இடையே போர் நிறுத்தத்தை ஏற்படுத்துவதற்காக எகிப்து பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டிருந்ததாக பலஸ்தீன ஆயுதக்குழுக்கள் தெரிவித்துள்ளன.

No comments