ஓட்டமாவடி தேசிய பாடசாலை பழைய மாணவர் (கட்டார் கிளை) பஸ் கையளிக்கும் நிகழ்வு - East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East

East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East

East Times:Bringing news stories from Sri Lanka

STAY WITH US

test banner

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Monday, November 5, 2018

ஓட்டமாவடி தேசிய பாடசாலை பழைய மாணவர் (கட்டார் கிளை) பஸ் கையளிக்கும் நிகழ்வு


ஓட்டமாவடி தேசிய பாடசாலைக்கு பஸ் வண்டி கையளிக்கும் மாபெரும் வரலாற்றுச் சிறப்பு நிகழ்வு கட்டாரில்  

ஓட்டமாவடி தேசிய பாடசாலையின் பழைய மாணவர் சங்க கட்டார் கிளையினர் பாடசாலையின் நூற்றாண்டு விழாவினைச் சிறப்பிக்குமுகமாக முன்னெடுத்த பஸ் வண்டியொன்றினைக் கொள்வனவு செய்து வழங்கும் திட்டம் பழைய மாணவர் சங்க கட்டார் கிளையினரின் அர்ப்பணிப்பு, தியாகங்களுடன் எமது உறவுகளின் பூரண நிதிப்பங்களிப்பு, ஒத்துழைப்புடன் வெற்றிகரமாக நிறைவுற்ற நிலையில், பாடசாலைக்கு பஸ் வண்டியினை உத்தியோகபூர்வமாகக் கையளிக்கும் மாபெரும் வரலாற்றுச் சிறப்பு நிகழ்வு எதிர்வரும் 23.11.2018ம் திகதி வெள்ளிக்கிழமை பிற்பகல் 4 மணி முதல் பனார் பின் ஸைத் மாநாட்டு மண்டத்தில் கோலாகலமாக இடம்பெறவுள்ளது.
 
பழைய மாணவர் சங்க கட்டார் கிளையின் தலைவர் அஷ்ஷெய்க் எம்.ஐ.அஜ்மீர் தலைமையில் இடம்பெறும் இச்சிறப்பு நிகழ்வில் பிரதம அதிதியாக கட்டார் நாட்டுக்கான இலங்கைத் தூதுவர் மேதகு ஏ.எஸ்.பி.லியனகே அவர்கள் கலந்து சிறப்பிக்கவுள்ளார்.
 
அத்துடன், விஷேட அதிதியாக பாகிஸ்தானுக்கான உதவித்தூதுவர் என்.எம்.முஹம்மது அனஸ், கெளரவ அதிதிகளாக வீனஸ் வைத்தியசாலையின் பணிப்பாளர் Dr. எம்.பி.எம்.அஜ்வத் (MBBS), பாகிஸ்தான் நிஷாத் டைரி (Nishad Diary) நிறுவனத்தின் முகாமையாளர் Dr.சித்தீக் சம்ஷுதீன், இலண்டன் டெஸ்கோ நிறுவனத்தின் முகாமையாளர் எம்.ஏ.சீ.எம்.மர்ஷூக் ஆகியோரும் கலந்து கொள்ளவுள்ளனர்.
 
அத்துடன், பிரதம விருந்தினர்களாக மட்டக்களப்பு மத்தி வலயக்  கல்விப் பணிப்பாளர் எம்.எல்.ஏ.ஜுனைத், ஓட்டமாவடி தேசிய பாடசாலையின் அதிபர் எம்.ஏ.ஹலீம் இஸ்ஹாக் அப்துல்லாஹ் பின் ஸைத் கலாசார நிலைய பிரசாரகர் அஷ்ஷெய்க் சைனுத்தீன் மதனி ஆகியோருடன், பாடசாலையின் கணித விஞ்ஞானப் பிரிவுத்தலைவர் எம்.எம்.நவாஸ், ஓட்டமாவடி தேசிய பாடசாலையின் குவைத் கிளை சார்பாக எம்.ரீ.ஜெளபர் ஆகியோரும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
 
இவ்வரலாற்று நிகழ்வில், பஸ் கொள்வனவுத்திட்டத்திற்கு பல்வேறு வழிகளிலும் ஒத்துழைப்பு, நிதிப்பங்களிப்பு வழங்கிய சுமார் 45 பேருக்கான சிறப்பு கெளரவமளிக்கப்படவுள்ளமை சிறப்பம்சமாகும். கெளரவிக்கப்படுவோருக்கான அழைப்பு தனித்தனியே விடுக்கப்பட்டுள்ள நிலையில், அனைவரும் கலந்து கொண்டு தங்களுக்கான கெளரவங்களைப் பெற்று நிகழ்வு சிறப்புற ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
 
பல்வேறு நிகழ்வுகளுடன் இடம்பெறவுள்ள இவ்வரலாற்றுச்சிறப்பு நிகழ்வில் கட்டாரிலுள்ள ஓட்டமாவடி தேசிய பாடசாலையின் பழைய மாணவர்கள், கல்குடாவைச் சேர்ந்த அனைத்து சகோதரர்கள் மற்றும் எமது பஸ் கொள்வனவுத்திட்ட நிதி சேகரிப்பில் கலந்து பங்களிப்புச் செய்த சகோதரர்கள், கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் கலந்து கொண்ட கிரிக்கெட் கழங்களின் தலைவர்கள், முகாமையாளர்கள், வீரர்கள், ஒத்துழைப்பு வழங்கியோர், கல்குடாவை மையப்படுத்தி கட்டாரில் இயங்கும் பொது நிறுவனங்கள், பிரசார அமைப்புக்களின் பிரதிநிதிகள், பிரசாரகர்கள் மற்றும் நலன்விரும்பிகள் அனைவரையும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு ஓட்டமாவடி தேசிய பாடசாலையின் பழைய மாணவர் சங்க கட்டார் கிளையினர் அன்புடன் அழைக்கின்றனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages