நீதித்துறை சுதந்திரமாகவே இயங்குகிறது ; சிரேஷ்ட சட்டத்தரணி எஸ்.எம்.ஏ.கபூர்
நமது நாட்டில் நீதிநியாயம் நிலை நாட்டப்பட்டுள்ளது என்பதற்கு ஆதாரம் தான் அண்மையில் உயர் நீதிமன்றினால் வழங்கப்பட்ட இடைக்கால தீர்ப்பு.
மு.கா.வின் பிரதித்தலைவர் சிரேஸ்ட சட்டத்தரணி எஸ்.எம்.ஏ. கபூர்

இந்த விடயம் தொடர்பாக முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் கௌரவ ரவூப் ஹக்கீம் அவர்களும் இணைந்து இடை விடாது இப் போராட்டத்தில் அயராது அல்லும் பகலும் பாடுபட்டு இந்நாட்டில் ஜனநாயகம் வாழ வேண்டும் அநியாயங்களும் அட்டூளியங்களும் அழிக்கப்பட்டு ஒழிக்கப்பட வேண்டும் என எமது கட்சித் தலைவரும் ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒன்றாக இயங்கியதன் பலனாக நாம் அடைந்த வெற்றி மற்றவர்களுக்கு உதாரமணமாக இன்று அமைந்துள்ளது எனவும் குறிப்பிட்டார்.
இந்த வழக்கில் வாதாடிய அணைத்தும் சட்ட வல்லுனர்கள் அரசியல் கட்சி தலைவர்கள் ஏனைய முக்கிய பிரமுகர்களுக்கும் நாம் எமது நன்றியைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றோம். இந்தநாட்டில் இன்னும் ஜனநாயகம் வாழ்ந்து கொண்டிருக்கிறது என்பதற்கு இவை நல்லசான்றாக அமைந்தள்ளனதைப் பார்க்கும் போது வல்ல இறைவனுக்கு நாம் நன்றி கூற கடமைப்பட்டுள்ளோம்.
எதிர்காலத்திலும் இந்த நீதி நியாயங்களை நிலை நாட்டி அரசியல் தர்மம் தார்மீகம் ஜனநாயகம் போன்றவைகளை வெற்றி பெறுவதற்கு இந்த சுதந்திரமான போராட்டத்தில் முன்னேறிச் செல்ல வேண்டும் என்பதே எமது நாட்டின் பெரும்பான்மை மக்களின் ஆசையாகும். அவைகள் அனைத்தும் நிறைவேறுவதற்கு வல்ல இறைவனை நாங்கள் பிராத்திக்கின்றோம்-
No comments